Wednesday, January 5, 2011

சிவானந்தா

0 கருத்துக்கள்
இப்படித்தான்
இன்றல்ல
நேற்றல்ல
எப்போதுமே!
ஆதிகார கம்பிகளின் பின்னால்
பொய்களின் சேற்றுக்குள்
நியாயங்கள் புதைக்கப்பட்டுவிடும்!
சிவா!
இதயத்தில்இன்னமும்
ஊமைக்காயமாய்
ஆறாது கிடக்கிறது
நீ எம்மோடு சுற்றிய
நாட்கள்!
ஆறாத காயத்திலிருந்து
வடியும் இரத்தமாய்
வழிந்துகொண்டு இருக்கிறது
உன் பற்றிய
நினைவுகள்......
பொழுதுகள் விடிந்து
மறையும் போது
நினைவுகள் பூக்களாய் மலர்ந்து
உதிர்ந்து போவதற்கு
நாங்கள் மரங்களல்ல!
பாறைகள்!
எழுதினால் போதும்
சுமந்து கொண்டேயே இருப்போம்
தூர்ந்து போகும்வரை!


மா.குருபரன்

குறிப்பு :02-01-2006 ம் ஆண்டு திருகோணமலையில் படுகொலைசெய்யப்ட்ட 5 பல்கலைக்கழக மாணவர்களில் எமது சிவாவும் ஒருவன். அதில் கொல்லப்பட்ட அனைவருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க