Sunday, December 22, 2013

விடுதலைப்புலிகள் காலத்தில் முன்மொழியப்பட்ட இரணைமடு-யாழ் நீர் வழங்கல் திட்டம் ஏன் மாற்றபட்டது?

4 கருத்துக்கள்
இந்த நீர்வழங்கல் திட்டம் குறித்து சிறிதரன் எம்.பி மற்றும் இதர அரசியல் வாதிகள் மேடையில் விளக்கமற்ற விதத்தில் பேசுவதைவிடுத்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் செயற்திட்ட அறிக்கை குறித்து முழுமையான விதத்தில் ஆராய்ந்து அது குறித்து உடனடியாக சட்ட ரீதியிலான (நேர்மையான நீதிமன்ற செயற்பாடுகள் அற்ற நாட்டில் நீதி கேட்பது நியாயமில்லை என்றாலும் ஒரு ஆவணப்படுத்தலுக்கு சட்டரீதியிலான முன்னெடுப்புகள் செய்ய வேண்டியது கட்டாயம்) முடிவுகள் எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். காரணம் ஏராளமான பிழையான தகவல்கள் உள்ளடக்கபட்டதாக தெரிகிறது.

தவிர இந்த திட்டமானது 2002-2006 வரையிலான காலப்பகுதியில் திட்டமிடப்பட்டதாகவும் அந்த திட்டத்தில் மீண்டும் 2009-2010 காலப்பகுதியில் மாற்றங்கள் செய்யபட்டதாகவும் பட்டும்படாமல் குறிப்பிடபட்டிருக்கிறது. 
ஆக விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் இருந்த நேரம் உருவாக்கபட்டிருந்த திட்டம் மாற்றியமைக்கட்டிருக்கிறது என்பதே நிஜம். ஏன் அந்த திட்டத்தில் மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்? எவ்வகையான மாற்றங்கள் செய்யபட்டன என்பது குறித்து அரசியல்வாதிகளும் இதில் நேரடியாக சம்மந்தப்பட போகும் தமிழ் தலைமைகளும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

சராசரி சாமனியர்களுக்கிடையில் எழுந்திருக்க கூடிய சந்தேகங்களின் நிலையில் இருந்து "ஒரு சில" விடையங்களை மட்டும் எங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன். 

முதலில் விடுதலைப்புலிகளின் காலத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு அமைப்பு பேசியவிடையங்கள் குறித்து அறிந்து வைத்திருப்பது அவசியம். விடுதலைப்புலிகள் காலத்தில் முன்மொழியப்பட்ட திட்டத்தின் சுருக்கமானது "இரணைமடு குளத்தின் மேலதிக நீரை வடிகாலமைப்புகள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று அங்கு நன்னீர் நீர்நிலைகளை உருவாக்குவது அல்லது புனரமைப்பது. அதனூடாக நிலத்தடி நீர் வளத்தை படிப்படியாக அதிகரித்து சீரான நிரந்தர நிலத்தடி நீர் வளத்தை உருவாக்குவது. தவிர அங்கிருந்து நீரை சுத்திகரித்து மக்களுக்கு வழங்குவது, தவிர நீண்ட காலத்தில் யாழ்மாவட்ட மக்கள் தங்களுக்கு அண்மித்த நீர் மூலங்களில் (கிணறுகளில்) தங்கி இருத்தல்".

விடுதலைப்புலிகள் காலத்தில் முன்மொழியபட்டு விடுதலைப்புலிகளால் ஏற்றுக்கொள்ளபட்ட இப்படிப்பட்ட திட்டத்தை மாற்றி நேரடியாக இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்கு மக்களின் வீடுகளிற்கு கொண்டு போக ஏன் இன்று சிறிலங்கா அரசு ஆர்வமாக இருக்கிறது?? (எதிர்காலத்தில் யாழ் நிலம் தண்ணீருக்காக இன்னொரு பிரதேசத்தில் தங்கியிருக்க வேண்டிய தவிர்க்க முடியாத கட்டாயத்தை உருவாக்குவது அரசின் நோக்கமாக இருக்கலாம்)

விடுதலைப்புலிகள் காலத்தின் முன்மொழியப்பட்ட திட்டம் குறித்து ம.செல்வின் எழுதியிருக்க கூடிய குறிப்புகளை கீழே பாருங்கள். 

அ). ஆறுமுகத்தின் திட்டத்தினை மீள் பரிசீலனைக்குக் கொண்டுவருதல் 
ஆ). கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி போன்ற தொலைதூர குடியிருப்புகளின் பிரதேசங்களின் நீண்டகாலக் குடிநீர்ப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஏதுவாக நன்னீர் மூலங்களைக் கண்டறிதலும், குடமுருட்டி ஆற்றை மறித்து நீர்த்தேக்கத்தினை உருவாக்குவதன் மூலம் தொடர்ச்சியாக நன்னீர் வழங்கக்கூய வாய்ப்புகளைக் கண்டறிதலும். 
இ). தொண்டமானாறு நீரேரியை நன்னீரேரியாக்குவதற்கு அதன் உவர்நீர்த் தடுப்பணைகளை மீளக்கட்டியமைத்தல். 
ஈ). யாழ்குடாநாட்டின் நிலத்தடி நீர்வளத்தை மீள்நிலைப்படுத்தி விரிவாக்குவதற்கு வேண்டிய நீண்டகால திட்டங்களை முன்னெடுத்தல். அதுவரையான காலத்திற்கு மட்டும் இரணைமடுக்குளத்திலிருந்து தண்ணீர்வழங்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்தல். 


உ). குடாநாட்டிற்கான குடிநீரினை குளத்திலிருந்து பெறும்போது அதிகபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு குளத்தின் உள்ளேயே நீர் உறிஞ்சுவதற்கான கிணற்றை அமைத்தலும்; குழாய்களுடாகக் கொண்டுசெல்லப்படும் நீரைத் தூரத்தேவைத்து சுத்திகரித்து குடாநாட்டின் மக்களுக்கு வழங்குதல்.. 
ஊ) யாழ்குடாநாட்டு மக்களை தொடர்ச்சியாகத் தொலைதூரத்திலிருந்து சுத்திகரித்து வழங்கப்படும் குடிநீர் வழங்கலில் தங்கவைத்தல் அவர்களின் சுயசார்பான இருப்புநிலையினை கேள்விக்கு உட்படுத்தும். எனவே குறிப்பிட்ட காலஅட்டவணைக்குள் (சுமார் 20-30 ஆண்டுகள்) குடாநாட்டின் நிலத்தடி நீர்வளங்களை மீள்நிலைப்படுத்துவதன் ஊடாக இப்பிரதேச மக்கள் தங்களுக்கு அண்மித்த (கிணறுகளில்) நீர்மூலங்களில் சார்ந்திருப்பதை உறுதிப்படுத்துதல். 
எ). இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்குடாவிற்கு குடிநீரைக் கொண்டு செல்வதனால் அக்குளத்து நீரில் தங்கி விவசாயம் செய்யும் விவசாயிகளின் நலன்கள் பாதிக்கப்படாதிருப்பதை மேலதிக உபதிட்டங்களுடாக உறுதிப்படுத்துதல். 
உபதிட்டம் 1. இரணைமடுக்குளத்தின் நீரேந்தும் இயலளவை அதிகரிப்பதற்காக குளத்தின் அணைக்கட்டைத் திருத்தி வலுவூட்டுதல். 
உபதிட்டம் 2. அணைக்கட்டின் உயரத்தை மேலும் இரண்டு அடிகள் உயர்த்த வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு மாற்றாக குளத்தின் நீரேந்து பகுதிக்குள் மாங்குளத்திற்கு அண்மித்து மற்றுமொரு வில்போன்ற அணைக்கட்டினை அமைத்து குளத்தின் நீரேந்து கொள்ளளவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளினை கண்டறிதல். 
உபதிட்டம்.3. குளத்திலிருந்து வயல்களுக்கு நீரெடுத்துச்செல்லும் வாய்க்கால்களைச் செம்மைப்படுத்தி நீர்வழங்கல் கதவுகளை சிறப்பாக அமைப்பதன்மூலம் நீர்வீணாகுதலை தவிர்த்தல். 
உபதிட்டம் 4. தற்போது விவசாயிகள் தங்களது தேவைக்கு மேலதிகமான நீரை வயல்களுக்கு பாச்சுகின்றனர். இதனால் மேலதிக நீர் வீணாவதோடு வயலுக்கு இடப்படும் உரங்களும் ஏனைய விவசாய உள்ளீடுகளும் நீருடன் கரைந்து வெளியேறுகின்றன. எனவே விவசாயிகளின் விவசாய முறைகளையும் நீர்முகாமைத்துவத்தையும் மேம்படுத்தவதற்கான பயிற்சிகளை வழங்குதலும் அதனால் மீதப்படுத்தப்படுக்கக்கூடிய நீரை மேலதிக விளைநிலங்களுக்கு பாய்ச்சுதலும். 


மேற்குறிப்பட்ட விடயங்கள்யாவும் உயர்புலமைவாய்ந்த துறைசார்நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டதுடன் இவை பற்றிய விபரங்களும் விவசாயிகள் அமைப்பினூடாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு விளக்கப்பட்டு அவர்களின் சம்மதமும் பெறப்பட்டிருந்தது. 
2006ம் ஆண்டிலேயே இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டுக்களை பலப்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதற்காக தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த தொழில்நுட்பவியலாளர்கள் குளத்தின் அணைக்கட்டுப் பகுதிகளில் தங்கி பணியாற்றவும் விடுதலைப்புலிகள் அனுமதித்திருந்தனர். 

ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டு செயற்பாட்டடிற்கு முடிவெடுக்கபட்டிருந்த இப்படிப்பட்ட திட்டத்தை அவசர அவசரமாக ஏன்  மாற்றியமைக்க வேண்டும் என்பது குறித்து இன்று இருக்க கூடிய தமிழ் அரசியல் தலைமைகள் ஏன் ஆராயவில்லை?

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆவணத்தில் இருக்க கூடிய சில புள்ளிவிபர தகவல்களை வாசகர்களின் புரிதலுக்கு இணைக்கிறேன்.

மழைவீழ்ச்சி தொடர்பான புள்ளிவிபரம்

மழைவீழ்ச்சி தொடர்பான புள்ளிவிபரம் குறித்து மேலதிகமாக எதையும் எழுதத்தேவையில்லை என்று நினைக்கிறேன். 




மேலே கொடுக்கபட்டிருக்கும் புள்ளிவிபரமானது எந்த அளவிற்கு உண்மையானது?? இதில் கொடுக்கபட்டிருக்கும் புள்ளிவிபரமும் இலங்கை அரசாங்கம் வருடாவருடம் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு சொல்லும் புள்ளிவிபரமும் சரியானதா?? இப்படி சமூக மற்றும் சூழலியல் குறித்த ஏராளமான முன்னுக்கு பின் முரணான தரவுகளுடன் நீர்வழங்கல் மேம்பாட்டு திட்டமானது மீள்வடிவமைக்கபட்டிருக்கிறது. 


தவிர Consultant Team இல் கட்டாயம் இராணுவம் இருக்க வேண்டும் என்றும் சொல்லபட்டிருக்கிறது. காரணம் பாதுகாப்பு மற்றும் இராணுவ நிலைகள்இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தேர்தலில் வென்றவுடன் இராணுவத்தை அகற்ற சட்டரீதியில் அவசர அவசரமாக வேலை செல்வதாக சொன்ன த.தே.கூட்டமைப்பு  இன்று இந்த புரஜெக்டில் இராணுவம் ஏன் சம்மந்தப்பட வேண்டும் என்ற கேள்வியை கேட்பதாக தெரியவில்லை. 

மக்களின் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலம் தவிர்க்கப்பட முடியாமல் பாதிக்கப்படலாம் என்றும் சொல்லபட்டிருக்கிறது. 

கிளிநொச்சி மற்றும் யாழ்மாவட்ட நிலப்பாவனை அல்லது விவசாயம் தொடர்பான தகவல்கள் (2003 வரையிலான) குறிப்பிடபட்டிருக்கின்றன ஆனால் இன்று (2013) பாவனையில் இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் அனுமதிக்கப்படாத விவசாய நிலங்கள் குறித்த தகவல்கள் மறைக்கபட்டிருக்கின்றன. 

போருக்கு பின்னர் பாதிப்படைந்திருக்கும் நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் குறித்தோ படையினரின் ஆக்கிரமிப்பால் பாவிக்க முடியாத நிலையில் இருக்கும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நிலங்கள், நீர் நிலைகள் குறித்து எல்லா தகவல்களும் மறைக்கபட்டிருக்கிறது. 

Project Master Plan இல் குறிபபிடபட்டிருக்கும் தகவல்கள் மற்றும் கால அளவீடுகள் ஆனது பெரும் சந்தேகத்தை உருவாக்குகிறது. உண்மையாகவே இரணைமடு எனும் பெரும் நீர் நிலையானது முழுமையாக புனரமைக்கப்பட இருக்கிறதா அல்லது பெயரளவில் மேலதிக Concrete structure மட்டும் செய்யப்பட இருக்கிறதா என்ற அச்சம் எழுகிறது. 

இப்படி ஏராளமான சந்தேகங்களும் விடுதலைப்புகளின் காலத்தில் முன்மொழியப்பட்ட திட்டம் ஏன்? எப்படி? மாற்றபட்டது அதன் பின்னணியில் இருக்க கூடிய காரணங்கள் குறித்து வடமாகாணசபை ஆராய வேண்டும்.

குறிப்பு: இன்று நடைமுறைப்படுத்த அரசு ஆர்வம் காட்டிவரும் திட்டமானது சந்தேகத்திற்கு இடமானது என்ற றிலையில் இருக்கும் போது இந்த திட்டத்தால் கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டத்தில் ஏற்படப்போகும் இதர சமனிலை மாற்றங்கள் குறித்து இந்த இடத்தில் பேசிப் பிரயோசனமில்லை என்று நினைக்கிறேன்.


மா.குருபரன்
22-12-2013





4 கருத்துக்கள்:

  • December 22, 2013 at 11:22 AM
    Thusman :

    super anna... aanaal, neenga epdi thaan eluthinaalum ithu thaan unmai enru ellaarukkum therinchirunthum entha palanumillai enrathum unmaiyaana karuththa thaan irukku....

  • December 22, 2013 at 2:01 PM

    உண்மைதான் மச்சான். இருந்தாலும் என்ன நடக்கிறது என்பதை தெரியாவதர்களுக்கு சொல்லியே ஆகவேண்டும்.

    ஆசிய அபிவிருத்தி வங்கியின் செயற்திட்டத்தை தமிழ் அரசியல்வாதிகள் கட்சிபேதமின்றி வாசித்து அதன் ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும்.

  • December 23, 2013 at 12:18 AM

    பகல் படிக்க முடியலை குரு மன்னிக்கவும்... மிக மிக ஆழமான ஆக்கம் ஒன்று அதிலும் மழை வீழ்ச்சி தரவுகளில் அரச குழறுபடிய இருப்பது போல ஒரு உறுத்தல். ஒரே ஒரு குழப்பம் குடிநீருக்கு வேறு பிரதேசத்தை நம்பியிருக்க வேண்டி வரும் என வசனம் அந்த தொண்டமான் குறிப்பிலும் தங்கள் குறிப்பிலும் வருகிறது. அது எவ்வகையானது காரணம் வழமையான நிலத்தடி நீருக்கு சேதாரம் வர சந்தர்ப்பம் இல்லைத் தானே ??

  • December 23, 2013 at 8:20 PM

    சுதா: இப்போது இருக்கும் நிலவரத்தின்படி யாழ்ப்பாணத்தில் நாளொன்றுக்கு வெளியேற்றப்படும் நிலத்தடி நீருக்கு ஏற்றவாறு நீர்ச் சமனிலையை பேணக்கூடிய அளவு நீர்நிலைகள் யாழ்ப்பாணத்தில் இல்லை.

    சிறிலங்கா அரசின் திட்டன்படி யாழ்மாவட்ட நிலநீர் தொடர்பில் எந்த கவனமும் செலுத்தப்படவில்லை. யாழ்மாவட்ட நன்னீர் நீர்நிலைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. உவர்நீர் நிலைகளை நன்னீர் நீர்நிலைகளாக மாற்றும் திட்டம் ஏதும் இல்லை.

    ஆகவே யாழ்மாவட்ட மக்கள் எதிர்காலத்தில் கிளிநொச்சி தண்ணீர் விநியோகத்தில் முற்றுமுழுதாக தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். தவிர யாழில் நிலத்தடி நீர் இல்லாது போய்வருவதால் எதிர்காலத்தில் யாழில் முழுவரட்சி ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாத ஒன்று. .. .. .

    அதுபோக மழைவீழ்ச்சி புள்ளிவிபரம் சம்மந்தப்பட்ட Department இல் இருந்து பெறப்பட்ட ஒன்றே அது பிழையாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். .. ..

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க