Friday, December 6, 2013

நெல்சன் மண்டேலாவை பிடிக்கும் எத்தனை பேருக்கு சுதந்திர விடுதலைப் போராட்டங்களை பிடிக்கும்!!!!

1 கருத்துக்கள்

** நெல்சன் மண்டேலா என்ற நாமம் நிற வெறிகொண்ட தென்னாபிரிக்க அரசுக்கு மாத்திரமல்ல உலக ஏகாதிபத்திய அரசுகளுக்கும் பெரும் தலைவலியாக இருந்தது.

** அமைதிக்கான நோபல் பரிசு வாங்கிய நெல்சன் மண்டேலா என்ற விடுதலைப்போராளி ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர். நிற வெறி அரசுக்கு எதிராக கெரில்லா முறையிலான இராணுவ தாக்குதல்களை அந்த இராணுவம் மேற்கொண்டிருந்தது.

** 2008 வரை நெல்சன் மண்டேலா அமெரிக்க அரசாங்கத்தால் தடைசெய்யபட்டிருந்த பயங்கரவாதி.

** புஸ் அரசு ஈராக் மீது போர் தொடுக்க அதை கண்டிப்பதற்கு நெல்சன் மண்டேலா நேரடியாகவே ஜோர்ஸ் புஸ் இற்கு அழைப்பெடுத்திருக்கிறார். அழைப்பை ஏற்க மறுத்திருக்கிறார் புஸ். அதன் பின்னர் வந்த அரசு நெல்ஸன் மண்டேலாவை நேரில் சென்று பார்பதற்கு முயற்சியெடுத்தது.

நெல்சன் மண்டேலாவின் சுதந்திர விடுதலைப்போராட்டமும், விடுதலையும் அதன் தொடர்ச்சியாக எழுந்த அரசியல் நகர்வுகளையும் பார்த்தால் தென்னாபிரிக்காவை மீண்டும் ஒருவித அடிமைத்தனத்திற்குள் வைத்திருக்க மேற்குலகம் எடுத்திருக்கும் முயற்சிகள் தெளிவாகும். அதே நேரத்தில் நெல்சன் மண்டேலா எடுத்திருக்க கூடிய பொருளாதார கொள்கையை வைத்து தென்னாபிரிக்காவை சீர்குலைக்கும் மேற்கத்தைய பணப்புரள்சி தில்லு முல்லுகளும் புரியும்.

அதற்கு முதலில் நிறவெறிக்கு எதிராக போராடிய மற்றைய வீரர் மாரட்டின் லூதர் கிங் பற்றியும் சுருக்கமாக பார்த்துவிட்டு நகர்வது பொருத்தமானது.

மார்ட்டின் லூதர் கிங்


நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் போராடி வென்றதும் அவரும் நோபல் பரிசு பெற்றதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


அமெரிக்காவிற்கு கறுப்பினத்தவர்கள் எப்படி அடிமைகளாக கொண்டுவரப்ட்டனர், எப்படி அடிமைகளாக நடாத்தபட்டனர், எப்படி எப்படியெல்லாம் மாரட்டின் லூதர் கிங் போராடினார் என்பதை முந்தால் தேடிப்படியுங்கள். கட்டாயம் வாசிக்க வேண்டிய நபர்கள்.

மார்ட்டின் லூதர் கிங் செய்த போராட்டங்கள் நெல்சன் மண்டேலாவின் போராட்டங்கள் இரண்டும் வெவ்வேறானவை.

இந்த இடத்தில் மார்ட்டின் லூதர் கிங் இன் போராட்டங்களில் மறைக்கப்ட்ட உண்மைகள் சிலவற்றை பேசியே ஆகவேண்டும்.

கிறிஸ்தவ பாதிரியாரான மார்ட்டின் லூதர் கிங் வன்முறை எதிர்ப்பாளராக பல இடங்களில் காட்டப்பட்டிருந்தாலும் அவரின் தலமையில் ஏராளமான வன்முறைகள் யூதர்களுக்கு எதிராக நடந்தேறியிருக்கிறது.

யூத குடிசைகள் யூத வணக்க தலங்கள் என ஏராளமான யூத இன மக்களின் இருப்புகள் எரித்தழிக்கபட்டிருக்கின்றன. ஏராளமான யூதர்கள் பலியெடுக்கபட்டிருக்கிறார்கள். இது சம்மந்தமான குறிப்புகள் யூத இனத்தின் அழிவு மற்றும் எழுச்சி தொடர்பான பதிவுகளில் காணப்படுகிறது.

ஆக மார்ட்டின் லூதர் கிங் நிறவெறிக்கு எதிராக செய்த போராட்டங்களில் வெள்ளையினத்தவருடன் சந்திக்கக் கூடிய புள்ளியாக கிறிஸ்தவத்தை நாசுக்காக விதைத்து தான் உரிமைக்கான பேச்சுக்களை சந்தித்திருந்தார் என்பது தான் உண்மை.

இருந்தாலும் மார்ட்டின் லூதர் கிங் செய்த உரிமைப்போராட்டத்திற்கு எதிராக சில கறுப்பினக் குழுக்களும் செயற்பட்டிருக்கின்றன. வெள்ளையினத்தவர்கள் ஆளப்பிறந்தவர்கள் என்றும் அவர்களுக்கு அடிமைகளா கஇருப்பது அல்லது அவர்களை மதிப்பது தான் நீக்ரோக்களின் கடமை என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டதும் வெள்ளையினத்தவர்களுடன் இணைந்து உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் தலமையிலான மக்கள் தொகுதியினரை தாக்குவது மற்றும்  காட்டிக்கொடுப்பது போன்றதான ஈனச் செயல்களில் ஈடுபட்டனர்.

ஆனால் இன்று காட்டிக்கொடுத்த நீக்கிரோக்களின் பரம்பரையும் அமெரிக்காவில் தங்களை சம உரிமையுடையவர்களாக பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள்.

போராடுபவர்கள் துரோகிகளுக்கும் சேர்த்துத்தான் போராடுகிறார்கள். போராட்டங்கள் வென்ற பின் துரோகிகளின் சந்ததிகள் துரத்தப்படவுமில்லை பூண்டோடு அழிக்கப்படவுமில்லை.

நெல்சன் மண்டேலாவின் பக்கங்கள். 


நெல்சன் ரோபிசலா மண்டேலா என்ற இயற்பெயரைக் கொண்ட நெல்சன் மண்டேலா 1918ம் ஆண்டு யூலை 18ம் திகதி பிறந்தார். ஆபிரிக்க பழங்குடியினத்தை சேர்ந்தவர்.

சட்டத்தில் பட்டப்படிப்பை முடித்த நெல்சன் மண்டேலா ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவிற்கு தலமை தாங்கி ஆபிரிக்க நிறவெறி அரசிற்கு எதிராக ஏராளமான தாக்குதலை மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக கைது செய்யபட்டு 27 வருடங்கள் சிறையில் அடைக்கபட்டு அதிலும் 20 வருடங்களுக்கு மேலாக தனிமைச்சிறையில் அடைக்கட்டு 71 வயதில் சிறையில் இருந்து விடுவிக்கபட்டார். (சிறைக் காலம் 1962 -1990).

நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்கு பின்னர் 1994ம் ஆண்டு ஜனாதிபதியானார். ஆனால் தென்னாபிரிக்க கறுப்பினம் முற்று முழுதாக விடுதலையடைந்ததா?? சர்வதேச இயங்குவியலுக்கு ஈடுகொடுக்கிறதா?? என்பதே இன்று எழுந்திருக்கக் கூடிய மிகப்பெரிய கேள்வி.

அடிமைகளாக இருந்த கறுப்பினத்திற்கு வாழ்வாதார அபிவிருத்திகள் உருவாக்கபட்டல் வேண்டும் என்பதற்காக மேற்குலகுடன் முரண்படாமல் பொருளாதார சலுகைகளை வழங்கினார் நெல்சன் மண்டேலா.

மேற்கத்தைய நிறுவனங்கள் ஆபிரிக்காவிற்குள் ஊடுருவியது. தமது வர்த்தக மேலாண்மை நிலைக்க வேண்டுமென்றால் விடுதலை உணர்வுடன் இருக்கும் கறுப்பினம் பிரிக்கப்ட்ட வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையுடன் தமது உத்திகளை கையாண்டனர்.

விடுதலைக்காக ஒன்றாக நின்று போராடிய அடிமைகளுக்குள் முதலாளிகளும் தொழிலாளிகளும் உருவாக்கட்டனர். செல்வந்தர்களும் ஏழைகளும் உருவாக்கட்டனர். தென்னாபிரிக்காவை சூழ உள்ள மற்றைய ஆபிரிக்க நாட்டில் இருந்து கறுப்பினத்தவர்கள் வேலை தேடி தென்னாபிரிக்காவிற்குள் நுழைவதற்கு கவரபட்டனர் என்பதற்கப்பால் நுழைவதற்கு அனுமதிக்கட்டனர்.

விடுதலை பெற்ற இனம் அவர்களுக்கு தெரியாமலே தரம் பிரிக்கபட்டு மீண்டும் அடிமைகளாக்கபட்டனர்.

தென்னாபிரிக்காவின் பெறுமதியான இயற்கை வழங்கள் மேற்கத்தைய கம்பனிகள் சூறையாடியபடியே இருக்கின்றன. தென்னாபிக்காவின் கறுப்பின முதலாளிகள் பெருத்தபடியே இருக்கிறார்கள். கறுப்பின ஏழைகள் உருவாக்கப்பட்டபடியே இருக்கிறார்கள்.

ஒரு இனத்திற்காக தனது சொந்த வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவனால் முற்று முழுதாக தனது தேசத்தை கட்டியெழுப்ப முடியாமல் போனதற்கு காரணம் ஆபிரிக்க தேசத்தில் இருந்த கறுத்த ஆடுகள் தான்.

மேற்கத்தைய கம்பனிகளின் வருகையை சாதகமாக்கிய பொருனாதார கொள்ளையை பயன்படுத்தி தனது ஒட்டுமொத்த இனத்தையும் சராசரி வாழ்வாதார நிலமைக்கு மாற்றாமல் இயன்ற அளவு தங்களை வளப்படுத்திக் கொள்ள மேற்கத்தய கம்பனிகளுக்கு யால்ரா போட்ட கறுத்த ஆடுகளால் இன்று தென்னாபிரிக்க வளங்கள் அழிந்தபடியும் ஏராளமான ஏழைகள் உருவானபடியும் இருக்கிறார்கள்.


விடுதலையென்பது வெறுமனே கொடியேற்றுவது அல்ல. கல்வி, கலாச்சார, பொருளாதா,ர இராணுவ வல்லமை பொருந்திய கட்டுமானங்களை சொந்தமாக உருவாக்கி அதைப்பலப்படுத்தி கட்டுக் கோப்புக் குலையாமல் அடுத்த சந்ததியிடம் ஒப்படைப்பது ஒப்படைப்பது தான் இன விடுதலை.


*************************************

இரண்டாம் உலகப்போரின் பின்னர் விடுதலையான இனங்களில் முன்மாதிரியாக திகழ்வது யூதர்களின் இஸ்ரேல்.

நூற்றாண்டு காலமாக அழிக்கட்ட யூத இனத்தின் மீது இன்றைய நலமையில் வல்லரசுகள் கூட கைவைக்க முடியாத அளவிற்கு அவர்களின் வளர்ச்சி இருக்கிறது.

இஸ்ரேலின் "மொசாட்" எனும் உளவு அமைப்பு உலகில் எந்த மூலையிலும் என்ன வேணுமென்றாலும் செய்யும் என்ற நலமையிருக்கிறது. உலக பெரும் வர்த்தகத்தில் 15% வை யூதர்களினது என்று சொல்கிறது குறிப்புகள்.

ஒரு அமெரிக்க தாதி எழுதிய குறிப்பொன்றில் சொல்லபட்டிருக்கிறது என்னவென்றால்; இஸ்ரேலில் புகைத்தல் தடை செய்யபட்டிருக்கிறது என்பதற்கப்பால் கர்ப்பமாக உள்ள பெரும்பாலான தாய்மார்கள் பிள்ளை பிறக்கும் வரை கணக்கு பாடம் படிப்பார்களாம். "செஸ்" விளையாடுவார்களாம், சத்துள்ள உணவுகளை மட்டுமே உண்பார்களாம் காரணம் பிறக்கும் குழந்தை அறிவாளியாகவும் ஆரோக்கியமானதாகவும் வளர வேண்டும் என்பதற்காகவாம்.

புரட்சியாளர்களையும் புரட்சி தேசங்களையும் வாசியுங்கள்.

சாத்தியமில்லை என்ற எதுவுமே இல்லை என்ற நிலமைகளை எமக்கு முன்னால் பலர் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

மா.குருபரன்


7-12-2013


1 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க