Tuesday, December 24, 2013

இரத்தக் கறைபடிந்த கரங்கள்

0 கருத்துக்கள்

காந்தியமே!!!!
நாம் எரிந்து போன
சாம்பலின் படிமங்கள்
உங்களின் கரைகளில் தான்
கிடக்கிறது..-எமை
கொன்று போட்ட கழுகுகள்
உங்களிடம் தான் இருக்கிறது...
எங்கள் ரத்தத்தையும்
சொத்துகளையும்
தின்று போட்ட
உங்கள் கழுகிற்கு - இனி
உங்கள் தீனி தேவையில்லை...
தேவையானால்
உங்களை தின்னவும் - அது
கற்றுக்கொண்டு விட்டது....
அதனால் தான் சொல்கிறோம்
எங்களின் ரத்தம்அதன்
அலகில் காயுமுன்
கழுகை
கூண்டுக்குள் ஏற்றுங்கள்....


மா.குருபரன் 
04-05-2010




0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க