வாசிக்கப்படாத பக்கங்களாலும்
கோர்க்கப்படாத வார்த்தைகளாலும்
உலர்ந்து உதிர்ந்து போன
நினைவுகள்...
மௌனமாய் விரிந்துகிடக்கிறது - என்
நாட்குறிப்பேடு..
ஒவ்வொருநாளும்
வெற்றுத்தாள்களை புரட்டி
பேனாவை சொருகி வைப்பதோடு
முடிந்துவிடுகிறது எழுத்து...
நாட்குறிப்பேட்டின் பக்கங்களை
வெற்றுத்தாளாய்,
வெறுமையாய் கடந்து போவது
அத்தனை சுலபமல்ல..
மா.குருபரன்
31-05-2014

0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க