Friday, July 2, 2010

ஆற்று வெளி....

2 கருத்துக்கள்


தேய்ந்து
தொங்கும் நிலா..
வெளுறிப் போகும் வானத்தில்
வெண் பஞ்சு முகில்களின்
கிறுக்கல்கள்...
நீண்டு கிடக்கும்
கரை வெளியில்
மெளனமாய்
முட்டிச் செல்கிறது
ஆற்றின் அலை...
செத்து விடப்போகும் பகலின் - அந்த
கடைசி மணித்துளிகளில்
இரவின் ஆக்கிரமிப்பு...
நிசப்தம் தோய்ந்த
மணல் வீதிகளில்
தென்னங் கீற்று தென்றலின்
உலா...

கசந்து போகும்
மனித வாழ்வியலின்
தொலைவுகளை
ஆற்றி விடுகிறது
முட்டிச் செல்லும் காற்று....
வலித்திடும்
காதலின் ஏக்கங்களை
ரசிக்க வைக்கிறது
விரிந்து கிடக்கும்
ஆற்று வெளி......

பலர்..
ஆற்றிவிடத் தெரியாத
ஏக்கங்களையெல்லாம் அள்ளிச் சென்று
வீசிவிடுவது - இந்த
ஆற்றங் கரையில் தான்....
தோற்றுவிடுவோமோ என்று
ஏங்கிப் போகும் மனதை
தேற்றி அனுப்புகிறது - இந்த
ஆற்றங்கரைப்படுக்கை...


ஆசைகளில் திருப்தியற்ற மனிதனுக்கு திருப்தி தருவது இயற்கையும் குழந்தைகளும் மட்டுமே..

மா.குருபரன்
02-07-2010

2 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க