இதுவரை
உன்னுடன்
பேசவே இல்லை நான்
இருந்தும் -என்
கனவுகள்
எப்போதும் உன்னுடன்
மட்டுமே பேசுகிறதே
எப்படி???
எனக்கும்
உனக்குமான
அறிமுகமாகாத இடைவெளியில்
அனாதையாய்
காதல்....

பாரிஜாதமாய்
உன்
உதட்டோர
புன்னகையில்
ஒளிந்து கிடக்கும்
மெளனம்....
பெண்மையின்
மொழியோ!!!!
மா.குருபரன்
10-06-10
அருமையா எழுதியிருக்கீங்க குருபரன்... தமன்னா படமும் சூப்பர்...
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றிகள் தோழர் பாலாசி
நல்ல கவிதை...
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி soundar
அருமை வாழ்த்துக்கள்
//எனக்கும்
உனக்குமான
அறிமுகமாகாத இடைவெளியில்
அனாதையாய்
காதல்....//
ம்ம்
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் மிக்க நன்றி Tamilparks
நன்றிடா அருள்.... ஒருதலைக்காதல்கள் எப்பவும் அனாதைகள் தான்.