பல்லக்கில் செல்பவன்
பார்வையாளரை
ஏளனம் செய்கிறான்..
பல்லக்கு வாகனம்
பவனிக்கு மட்டும் தான்
என்பதை புரியாமல்....
தன்னை தானே விற்று
தின்று பிழைக்க கூடியவன்
என்னை
பாசிசவாதி என்கிறான்...
இறந்தவள் துகிலையும்
உரிகிறார்கள்
நெஞ்சு கொதிக்கிறதென்கிறேன்
துகிலுரிந்தவன் கை கோர்க்கும்
என்னவன்
எனை
பயங்கரவாதி என்கிறான்....
முட்கம்பி வதைகளில்
என்னினம்
சாகிறதென்கிறேன்,
யாரப்படி சொல்வது
என கேட்கும்
என்னவன்
எனை இனவாதியென்கிறான்....
தமிழை விற்று
வாழலாம் என்கிறான்...
தமிழை காத்து
வாழ்வோம் என்கிறேன்
அதனால்
மொழிவெறி வாதி பட்டம்
இலவசமாய் கிடைக்கிறது..
அடிப்படையில் நான்
மான வியாபாரம்
செய்யத்தெரியாத
பாசிசவாதி
பயங்கரவாதி
இனவாதி
மொழிவாதி
மா.குருபரன்
16-07-10
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க