முத்தம்
கேட்கிறேன் மறுக்கிறாய்,
கொடுக்கிறேன் மெளனமாகிறாய்,
கொடுத்தபின் ஏக்கமாய் பாக்கிறாய்....
முத்தம் பற்றிய மெளனத்துள்
நீ மறைத்து வைத்திருப்பது என்னடி
சகியே!!!
புன்னகை
வெட்கத்தில் - நீ
சிதறிக்கொள்ளும்
புன்னகைப் பூக்களின்
படுக்கையில்..
ரசித்தபடி தூங்குகிறது - என்
காதல்...
தொலைபேசி
உன் சூரிய குரல் வீச்சை
என்
பூமிக்கு கொண்டுவரும்
வானம்.... தொலைபேசி..
மா.குருபரன்.
31-07-2010
நன்றாக இருக்கு குருபரன்
It's good one
வார்த்தையே வர மறுக்கிறது குரு