Monday, August 2, 2010

பல்கலைகழகத்தின் வசந்த கால பொழுதுகள் 2...

1 கருத்துக்கள்
புலர்வு 1 ஜ படிக்க..


எமது வகுப்பின் தமிழ் மாணவர்கள்

இங்கு காலையிலும் மாலையிலும் பொதுவாக WAS க் குள்தான் இருப்போம். எல்லாரும் பொதுவாக இருப்பதால் சிங்கள சீனியர்சிடமும் அதிகம் மாட்டுப்படுவதற்கு சான்ஸ் இருந்தது. எந்தவொரு சிங்கள வசனமும் தெரியாத காலம் அது. ஒரு வேளை சீனியர்ஸ் தூசணத்தால பேசினாலும் புரியாது. சிரிப்பு மட்டும் தான் பதில் குடுக்கேலும் ஆனால் சிரிக்கவும் முடியாது. சிரிச்சா சிரிப்பு வெட்டணும். சிரிச்சா வாயை மூடி வாயின் ஒரு அந்தத்தில் இருந்து மறு அந்தம் வரை கத்தரிக்கோலால் வெட்டுவது போல பாவனை செய்து வெட்டி எறிய வேண்டும்.

வென்றான் பாஸ்கரன்
பாஸ்கரன். இவன் தான் எங்களுடைய வகுப்பில் அழகான ஆம்புள.யாழ்ப்பாணம் வரணி அனுப்பி வைத்த வைர மரம் அவன். வாழைப்பழம் மாதிரி மஞ்சள். மங்குஸ்தான் மாதிரி இனிப்பு. அப்பிடியொரு ஹன்ட் ஸம் பெடியன்.

நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. அன்றொரு நாள் பாஸ்கரன், சுகந்தரூபன்,சிவா, ராஜிவ் என சிலர் நாலாம் வருட அண்ணமார்ட கொஸ்டலுக்கு(பட்டுவிதான) அழைக்கப்பட்டிருந்தார்கள். பலவிதமான என்ஜாய்மன்ட் கூடிய கொஸ்டல் அது. நான்காம் வருட அண்ணமார் என்பதால் மற்றயவர்களை விட அதிகமாக நட்பு கொள்வார்கள். மோசமா வெருட்ட மாட்டார்கள்.
அன்று அங்கு போட்டி நடந்தது. எல்லை கோட்டை யார் முதலில் தாண்டுவது. வழமைபோன்ற போட்டிதான் ஆனால் சுவாரஸ்யமான முறையில் போட்டி நடாத்தப்பட்டது. எல்லோரும் தயாரானார்கள். மைதானத்தின் வெளிப்புறத்தில் ஆபாசமா சத்தங்களின் சமிஞ்சை கேட்டுகொண்டிருந்தது. இருந்தாலும் பயத்தினால் யாரும் அதுபற்றி அக்கறை எடுக்காதவர்கள் போல் நின்றுகொண்டிருந்தனர். ஆனால் வரணியின் வைரம் சாதுவாய் காதை எறிந்தது. கண்களை சுழற்றி எங்கிருந்து வருகிறது(சத்தம் ..வீடியோ) என்பதை கண்டு பிடித்து விட்டான். முதன் முதலில் பார்ப்பதால் சற்று வெறித்தனமாக வேகமெடுத்து உற்று நோக்கியிருந்தான். அந்த கணத்தில் போட்டியும் ஆரம்பித்திருந்தது. போட்டியின் முடிவு சற்றும் எதிர்பார்காதது. எல்லோரும் வியப்பில் விறைத்துப்போய் நின்றனர். ஆண்மையின் அத்துமீறல் பாஸ்கரனை போட்டியின் வெற்றியாளனாய் மாற்றியிருந்தது. ஆபாச சிந்தனை அவனை வெறிகொண்ட வீரனாய் மாற்றியிருந்தது.
அன்றைய நாட்களில் பரவலாக எல்லோர் வாயிலும் முணுமுணுக்கப்பட்டது பாஸ்கரனின் வெற்றிதான்.

முதலாம் வருட 1st Lane விடுதியில்...2005ம் ஆண்டு... முதலாவது பரீட்சைக்கு படிக்கும் பொழுது
**********************
அன்று ராஜிவ்ன் சொய்சாபர வீட்டில் எல்லோரும் செட் ஆகி ரொக்ஸியில் சச்சின் பார்க்க பிளான் பண்ணி சென்றிருந்தோம். ரொக்சியின் ஆடம்பரமான இருக்கையால் படம் தொடங்கி சிறிது நேரத்திலையே நான் தூங்கி விட்டேன். சீனியர்ஸ்க்கு தெரியாமல் களவாய் சென்றதால் ஏதோ திரில்ங்காய் இருந்தது. அடுத்தநாள் காலை நாங்கள் WAS அமர்ந்திரந்தொம். அப்போது எங்களுடைய சீனியர் அக்கா ஒராள் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தா. ஆள் நல்ல வெள்ளை நல்ல குண்டு. எனக்கு பக்கத்தில சுகந்தரூபன் இருந்திருந்தான். என்னை மெதுவாக தட்டி ஆளை காட்டிவிட்டு "வாடி வாடி வாடி.... கைபடாத சீடி" என்ற பாடலை பாடினான். அவாவின் நடைக்கும் சுகந்தனின் இசைக்கும் எங்களை வாரிப்போட்டது. எல்லோரும் அடக்கமுடியாத சிரிப்பால் வெடித்து சிரித்தோம். உண்மையிலையே எங்களால் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தது. சுற்றியிருந்தவர்கள் எங்களை கேவலமாயும் வியப்பாயும் பார்த்தார்கள். ராக்கிங் பீரியட்ல சிரிச்சா அவ்வளவுதான்.
நாங்கள் அவாவ பார்த்துதான் சிரிக்கிறம் என்பதை அந்த சிங்கள அக்கா புரிந்து கொண்டுவிட்டா. நேரடியாக நாம் அமர்ந்திருந்த இடத்திற்கே வந்து ஏன் சிரிசனிங்கள்???? என்னப்பாக்க சிரிப்பா வருகுது என்று ஆங்கிலத்தில் கேட்டார். என்ன காமடியெண்டா அவா எங்கள வெருட்டுவதாற்காக கொஞ்சம் கடுமையா பேசுவதாக நினைத்து பேசினா ஆனா அவா சொல்லேக்க அவான்ர முகத்தை பாத்தா இன்னும் சிரிப்புவரும். எனக்கு சிரிப்பு வந்நது..இறுக்கி மூடியிருந்தத உதடுகளுக்கிடையில் இடைக்கிடைய காற்று லீக் ஆனாது... பெரிசா சிரிப்பு வெடிக்க முதல் சிவா கீழ காலால உதைஞ்சான்.... நான் அவான்ர முகத்த பாக்காம கீழ குனிஞ்சபடி இருந்திட்டன். இதுக்கு பிறகு தான் திருவிழா தொடங்கிச்சு.

அந்த சிங்கள அக்கா தமிழ் சீனியர்ஸ்ட்ட விசயத்தை சொல்லிட்டா. அவே எங்கள விசாரணைக்கு எடுத்திட்டினம். யார் யார் சிரிச்சது??? ஏன் சிரிச்சனிங்கள்??? என்ன சீனியர்ஸ பாத்தா காமடியாவா இருக்கு??? இனி உங்கள கணக்கில எடுக்கிறதில்ல.... எல்லாரும் ஓடு. நாங்க இனி கதைக்க மாட்டம். என்னாவது செய்து துலையுங்க எண்டு தூசண மாலைக்குள் இந்த விசயங்களை சொல்லி முடிச்சினம். திருப்பியும் ஏண்டா சனியனுகளே சிரிச்சனிங்க??? சொல்லுங்கவன்டா எண்டு திருப்பி திருப்பி கேக்க சுகந்தரூபன் என்னை பார்த்தான்... அவன் பாக்க எனக்கு சாதுவா சிரிப்பு வந்திச்சு...திருப்பியும் சீனியர்ஸ் சொல்லுங்கடா எண்டு கத்தினா இவன் என்ணைபார்ப்பான்... எனக்கோ அவாவின்ர அசைவுக்கும் இவன்ர இசைக்குமுள்ள கொம்பிநேசன எல்லாருட்டடையும் சொல்லி சிரிக்கோணும் போல கிடக்கு.... என்னால அடக்க முடியல.. சிரிச்சிட்டன். நான் சிரிச்சதால சீனியர்ஸ் எல்லாரையும் சிரிக்க சொல்லி விட்டிற்றினம்..
அடம்பிடித்த சுமித்திரன்
அப்ப எல்லாரும் ஏலுமான அளவு மொக்கை சிரிப்பு சிரிக்க எங்கட வெள்ளவத்தை கரும் சிங்கம் மட்டும் சிரிக்காமல் அடம்பிடித்தான். சீனியர்ஸ்க்கு கடுப்பாகிவிட்து. அவன எப்பிடியாவது சிரிக்கப்பண்ணுங்க இல்லாட்டி உங்களுக்கும் தான் பிரச்சினையெண்டு சொல்லிட்டினம். நாங்களும் சிரிடா சிரிடா எண்டு சொல்றம் அவனோ அடம்பிடிக்கிறான். இந்த பகிடிக்கெல்லாம் எனக்கு சிரிப்பு வராது எண்டமாதிரி விறைப்பா பாக்கிறான். சிரிடா பண்டி இல்லாட்டி எல்லாருக்கும் ஆப்புடா எண்டு சொல்ல நம்மிட சுமித்திரன் தனக்கு தானே கீச்சு காட்ட ஆரம்பிச்சான். ஏண்டா எண்டு கேக்க "எனக்கு சிரிப்பு வரல அதுதான் கீச்சு காட்டுறன்' எண்டான். அவனே அவனுக்கு கீச்சு காட்டியும் அவனுக்கு சிரிப்பு வரல. பிறகு தன்ர கையால தன்ர வாயை பிடிச்சு இழுத்து சிரிக்கிற மாதிரி செய்தான்.அப்பொழுதும் அவனுக்கு சிரிப்பு வரல.அதில் நின்ற சீனியர்ஸ்க்கு கூட சிரிப்பை அடக்கமுடியவில்லை. சனியனுகள் சனியனுள் வந்து வாய்ச்சிருக்குதுகள் எங்களுக்கென்று கடுப்பாகியபடி விலகிவிட்னர்.
தனக்கு தானே கீச்சு காட்டி சிரிக்க றை பண்ணின முதல் ஆள் கரும் சிங்கம் சுமித்திரன் தான்.
தனக்கு தானே கீச்சு காட்டி சிரிக்க றை பண்ணின முதல் ஆள் கரும் சிங்கம் சுமித்திரன் தான்.

நினைவுகள் புலரும்....

மா.குருபரன்.
02-08-2010

1 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க