Tuesday, August 17, 2010

நிதர்சனம்...

0 கருத்துக்கள்

திசையறியா
குழந்தையாய்
ஏதோ ஒன்றை
தொலை தூரத்தில்
தேடிக்கொண்டிருக்கிறாய்...
நீ தேடும் - அந்த
வெளிச்சம்
சாதியத்தின் பட்டறையில்
தூக்கிலிடப்பட்டுக்கிடக்கிறது...
உன் கனவுகளின் ஆழம்
பண மூடைகளால்
மறைக்கப்பட்டுக் கிடக்கிறது...

கரன்ஷியை தின்றபடி -பல
கள்ளிப் பூக்கள்
கடவுளையே ஆழுவதால்
பள்ளி செல்லாது
சுள்ளி பொறுக்கியபடி
அல்லிப்பூ நீ
அடிமைப்படுத்தப்பட்டு
கிடக்கிறாய்......

மெளனமாய் வழியும் - உன்
வலிகளின் புன்னகையில்
பண முதலைகளின்
எக்காள விம்பம்......

என்ன செய்வேன்
நீ நினைக்கும்
கடவுள் செய்ய வேண்டியதை
காசு தான்
தீர்மானிக்கிறது....

மா.குருபரன்
17-08-10

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க