Wednesday, September 29, 2010

பல்கலைகழகத்தின் வசந்த கால பொழுதுகள் 4...

2 கருத்துக்கள்
நினைவுகள் 1
நினைவுகள் 2
நினைவுகள் 3

 சண்ணா எக்கிற பிரசண்ணா...

இப்படித்தான் ஒருக்கா சஞ்சயன் மாட்டிற்றான். கிரிக்கட் சீசன் என்றதால ஒரே கிரிக்கட் கதைதான். பொதுவா சிறிலங்கா இந்தியா எண்டா எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச ரீமுகள்.இன்ரெஸ்ட் இல்லாதவனுக்கும் விளையாடுறாக்களின்ட பெயரும் ஞாபகம் நிக்கும். ஆனா அவுஸ்ரேலியா இங்கிலாந்து இப்படியான ரீமுகளின்ர பயோடேட்டாவ யாருதான் ஞாபகம் வச்சிருப்பாங்கள். இப்பிடி சிந்திச்ச சண்ணா கிரிக்கட்டில் எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ள எடுத்துக்கொண்ட ரீம் அவுஸ்ரேலியா ஆட்டய போட செலக்ட் பண்ணின ஆள் சஞ்சயன். வகுப்பில பின்னுக்கு போனோட இருந்த சஞ்சயன சண்ணா மெதுவா அணுகிறான். சஞ்சயன் கிரிகட் விளையாட பெரிசா வாறதில்லையெண்டதால அவனுக்கு கிரிக்கட் தெரியாது என்று எடைபோட்ட சண்ணா சிறிலங்கா ரீம் பிளையர்ஸ்ஸ பற்றி நூல்விடுகிறான். சஞ்சயனிட்ட இருந்து பெருசா இன்றெஸ்ட்டான பதிலில்ல. அப்ப சண்ணா  "கோளையொருத்தன் சிக்கிட்டாண்டா" என்று மனசுக்குள் கூவியபடி அவுஸ்ரேலிய ரீமை பற்றி கதைவிட ஆரம்பித்தான். அப்போதைய அவுஸ்ரேலிய ரீமின் கப்படனின் பெயரை மாத்தி சொல்லி புழுகுத்தள்ளினதை அப்படி மறுநாள் சஞ்சயன் வகுப்பில் அனைவருக்கும் முன்னால் ஒப்பிவித்தான். இதில என்ன பகிடியெண்டா...சஞ்சயன் அவுஸ்ரேலியா ரீமின்ர மிகப்பெரிய விசிறி. அவுஸ்ரேலியா ரீமில இருக்கிறவன் எந்த எந்த கிளப்புகளில விளையாடுறவனுகள் என்று கூட தெரிஞ்சுவச்சிருக்கிறவன்தான் சஞ்சயன்..அவனிட்டப்போய் அவுஸ்ரேலியா ரீமின்ட கப்டின்ட பெயரையோ மாத்திச்சொன்னா கடுப்பாகாதா என்ன.

சண்ணா விட்ட வெடியை சஞ்சயன் வகுப்பில் சொல்லும் பொழுதுதான் அவன் முதல் கிலாலுக்கு விட்ட பத்து ரவுடிகளில் ஒருத்தன்... ஓபின் பட்ஸ்மன் என்ற  புலுடாக்களும் பப்பிளிக் பண்ணுப்பட்ட்து. அனைவரும் சேர்ந்து கூடி கும்மியடித்தும் சற்றும் சளைக்காத சண்ணா மீண்டும் அடுத்த வெடிக்கும்
சஞ்சயனையே தேர்ந்தெடுக்கிறான். அவன் அடுத்த வெடி இப்பிடி கடும் குவிக்கா புகைஞ்சிரக்கூடாது என்றதில மிகக்கவனமாய் இருந்தான். அதுக்கு அவன் செலக்பண்ணின ரைம் கம்பஸ் லீவு நாள்.பாதை திறந்திருந்ததால எல்லாரும் வீட்டுக்குப் போயிருவாங்கள். கொழும்பில இருக்கிற பெடியள் மட்டும் தான் நிப்பாங்கள். அதால சண்ணா வவுனியாவுக்கு போகாம ராக்கட்டா சஞ்சயன செலக்பண்ணிட்டான். பகல் சஞ்சயனின் வீட்ட போயிருந்து கதைச்சுக்கொண்டிருக்கேக்க இந்தியாவில எடுக்கிற புதுத்தமிழ் படங்களின்ர கள்ளக்கொப்பி உடனையே வவுனியாவுக்கு வாறதெண்டும் கொண்டுவாறாக்கள தனக்கு தெரியும் எண்டும்... சீடிய கள்ள தோணில கொண்டுவாறதெண்டும் சொன்ன சண்ணா ரஜினி நடிச்ச ஜக்குபாய் படக்கொப்பி வாறகிழமை வரும் என்டு மாபெரும் வெடியொன்றை நச்செண்டு போட்டிற்று சைலெண்டா நழுவிட்டான். பிறகென்ன ஃபோன் போட்டு கும்மினது தான். வெடிகள் மேல் வெடிகள் மாபெரும் பின்னடைவை தந்ததால் வெடி விடுவதில் இருந்து சைலண்டாகிட்டான் சண்ணா.


2005 ம் ஆண்டு கடைசி...எங்கட ஃபைனல் இயர் சீனியர்ஸ்க்கு ஃபைனல் எக்ஸாம் வந்திட்டு அப்ப அதுக்கு வாழ்த்தி ஃபெஸ்டியர் நோட்டிஸ் எழுதி ஒட்டுறது வழமை. அண்டைக்கு அப்பிடித்தான்.. கொஸ்டல்ல இருந்ததால நானும் சண்ணாவும் சுஜீவனும் நேரத்துக்கு போய் பேப்பர்கள்..மை எல்லாத்தையும் எடுத்து ஒழுங்குபடுத்திட்டு வாழ்த்தி எழுதுறத்துக்கு ஆழுக்கொரு வசனம் சொல்லுங்க என்று எழுதிக்கொண்டிருக்க...சண்ணான்ட சான்ஸ் வரேக்க சொன்னான் "எக்ஸாசுமுக்கு ரெடியா" என்று. டேய் ஒழுங்கா ஒரு வசனம் சொல்லடா என்று கேக்க .."மச்சான் எல்லாரும் விஸ்பண்ணி எழுதினா ஃபீங்கா இருக்காது... எக்ஸாமுக்கு ரெடியா என்டு எழுதினாத்தான் உம்மையிலையே ரெடியா ரெடியில்லையா என்டு பீலிங்கா இருக்கும்" என்று சாதாரணமாக சொன்ன ரவுடி சண்ணா அதை ஒட்டுறத்துக்கு பேப்பர்ல வேற எழுதிட்டான். பிறகென்ன.. அடங் கொய்யால என்டு கிளிச்செறிந்தது தான்.


இப்பிடி அடம்பிடிக்கிற சண்ணா ஃபெஸ்ட் இயர்ல தலைமுடி வளர்த்து நல்லா சுருட்டி சாய்பாபா மாதிரி வச்சிருந்த காலத்தில விடியேல அவன சாமியா நினைச்சு நாங்க அவனிட்ட ஆசி வேண்டினதும் இருக்கு ஹிஹிஹிஹி.
ஏனெண்டா பஸ்ல அவனுக்கு உடன உடன செட்டாகுமாம். அவன் தான் சொல்லுவான். பஸ் கதைகள் ரொமான்னடிக்கா  சொல்லுவான்.... அவள் இவன பாக்க இவன் அவள பாக்க கட்டுப்பேத்த சந்தில இறங்க வேண்டிய சண்ணா 6 கிலோமீட்டர் தாண்டி பாணந்துறையில இறங்கியும் இருக்கிறான்.

பேய் வீட்டில (நாங்க இருந்த வீட்டின் அடையாளப் பெயர்)  இருக்கேக்க சண்ணா விடியல நேரத்துக்கு எழும்புறத்துக்கு பஞ்சி.. சண்ணா எழும்புடா எண்டா அருளாம இருப்பான்... அப்பிடியே "நான் ரகுமான் பேசுற சண்ணா எழும்புங்கோ" என்ட...ஆ............ என்டு சவுண்டு குடுத்த படியே முறுகிக்கொண்டு எழும்புற சண்ணா எங்கட யூனியர் பெடியள் ஃபெஸ்டியர் கொஸ்டல்ல இருக்கேக்க காட்டின கூத்து கொஞ்ச நஞ்சமில்ல. யாடிக்கேத்த மூடி மாதிரி எங்களுக்கு வந்து வாச்சுதுகள் யூனியர்ஸா. நந்தன்..கெளரி..நம்மட அருள்..பிறகு..குலாஸ்...மற்றது அந்த றூமில சப்றி.. அன்பஸ். இதில நல்ல பெடியளும் இருக்கிறாங்கள். திருத்த மடியாத கழுதைகளாக அந்த செட்டுக்குள் நந்தன்..கெளரி.. அருள் இருந்தது..பிறகெப்பிடி மற்றவங்கள நிம்மதியா இருக்க விடுவானுகள்.
யூனியர் பசங்க சப்றி, அன்பஸ், கெளரி உடன் கீழ் நான்

அவங்களுக்கு எங்களில கடும் பாசம் :) :) எங்கள ஒரே கொஸ்டலுக்கு வரச்சொல்லி அடம்பிடிப்பான்கள். இல்லாட்டி அவனுகள் பேய் வீட்டுக்கு வந்திருவான்கள். அதால நாங்களே கொஸ்டலுக்கு போயிர்றது. :D :D
இப்பிடித்தான் அண்டைக்கொருநாள் போய் கொஸ்டல்ல கடும் அலுப்பு... நானும் சுஜிவனும் இவன பிடிச்சு தோள்ள அடிச்சுக்கொண்டு வந்திட்டம். இவன் அடம்பிடிக்க கீழ இறக்கிவிட எங்க தோழில தொங்கிக்கொண்டு வந்த சண்ணா றூமுக்கு கிட்டவா வர சொன்னான்... என்ன விடுங்கடா... இல்லாட்டி இப்பிடியே ரெண்டுபேரையும் நசிச்சு மண்ணுக்க தாட்டிருவன் என்டு.....
யூனியர் பெடியள் நந்தன், அரூப்வ் உடன் நான்


 நானும் சண்ணாவும்

மறந்து விட முடியாத  பல்லலைக்கழக வாழ்வின் நினைவுகள் இங்கு இன்னமும் புலரும்.....

மா.குருபரன்
29-09-10.

2 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க