Saturday, September 4, 2010

வியாபார விமர்சகர்கள்

12 கருத்துக்கள்

இந்த கட்டுரையை வாசிப்பவர்கள் எந்தக்கோணத்தில் எடுத்தாலும் சரி. கட்டுரையின் நோக்கம் சில கட்டுரைகளின் கட்டுரையாசிரியர்களின் உண்மைகளின் நிலைப்பாட்டை பேசுவதே.

சமகால விமர்சனங்கள் அரசியலுக்கு ஆரோக்கியமானதே ஆனால் விமர்சன அரசியல் ஊடாக சினிமா வியாபாரத்திற்கான விளம்பரம் நடைபெறுகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். முரண் அரசியல் எனும் அச்சில் நின்று பேசும் இவர்கள் ஒருசாராரின் துப்பாக்கி ரவைகளை மட்டுமே  பற்றி பேசும் மனநிலையின் நோக்கம் எதுவென வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வியல் பற்றி முரண் பேசும் எவனாவது பாதிக்கப்பட்ட மக்கள் இப்போது உள்ள சூழ்நிலையில் இருந்து பிரச்சினைகளை அணுவணுவாக பார்த்து அனுபவத்தில் எழுதுகிறானா என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

முள்ளிவாய்க்கால் படுகொலையை விமர்சன அரசியல் எனும் விதண்டாவாத மாயைக்குள்  இலக்கிய சாதனங்களை பயன்படுத்தி நடைபெறுவது வியாபாரமே அன்றி எதுவாக இருக்கமுடியும்??? வெறுமனே எதிர்ப்புவாதிகளி்ன் கருத்துகளை வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட  3 லட்சம் மக்களின் கருத்தாக,மாண்டுபோன 1 லட்சத்திற்கும் மேலான மக்களின் சிந்தனையாக இவர்கள் போதிக்க நினைப்பது எதை??? இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட மக்கள் பட்ட அல்லோலகலத்தை நேரில் நின்று அனுபவித்தவர்களா???? இல்லை சற்று அடங்கிய பின்னாவது வந்து கடைசி ஜந்து ஆறு மாதங்கள் நேரில் நின்று பார்த்தவர்களா???? ரத்தமும் சதையுமாக வந்த சனங்களை, விடுதலைப்புலிகளின் மேல் தமக்குள்ள காழ்ப்புணர்வை வெளிப்பாய்ச்சுவதற்கு  பாவிக்கும் இந்த ஈனப்பிறவிகள் பற்றி வாசகர்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம். இதில் இன்னொரு முக்கியவிடயம் போரில் சிங்கள அரசு ஆடிய கொலைத்தாண்டவத்தை நேரில் பார்த்த சிலர்கூட அதை விற்று சொத்து சேர்க்கின்றனர் என்பதே. காரணம், சாட்சியமாக எதைவேணுமென்றாலும் எழுத்தினால் புனைந்து ஆவணமாக சிங்கள அரசை காப்பற்றும் போது அங்கு பணம் புழங்குவதை குழந்தை கூட அறியும். அநாதைப்பிணங்கள் என்று வவுனியா வைத்தியசாலையில் அடிக்கிவைக்கப்பட்டிருந்த பிணங்களை அரச செலவில் அடக்கம் செய்வதென்று கொண்டும் செல்லுமிடத்தில் யாராவது தெரிந்தவர்கள் கண்டு இந்த பிணம் எமக்கு தெரிந்தவர்கள் தாருங்கள் என கேட்கும் போது புதைப்பதற்கு கொண்டு சென்ற சிங்களர்கள் பணம் வாங்கிய பின் பிணத்தை கொடுத்த கொடூரத்தை இந்த ஈனப்பிறவிகள் நேரில் நின்று பார்த்திருப்பார்களா என்ன!!!!

அது போக தமது தமிழ்நாட்டு சினிமா உள்நுழைதலின் பிற்பாடு தாம் செய்யப்போகும் வியாபாரத்திற்காக தமது பெயர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகவே இந்த ஈழத்து இலக்கியவாதிகள் சிங்கள அரசினால் காவு கொள்ளப்பட்ட தமது உறவுகளின் பிணங்களை வைத்து முரண்பேசி விற்றுக்கொண்டிருக்கின்றனரே தவிர மக்களின் விடுதலைமேல் உள்ள பற்றுதல் அன்று. விடுதலைப்புலிகளை மட்டும்(மற்றய தமிழ் இயக்கங்களையல்ல) கொடுரமாக சித்தரிப்பதனூடாக இவர்கள் சிங்கள அரசின் கொலைத்தாண்டவத்தை மனிதாபிமானமாக ஏற்றுக்கொள்ள முனைவது வெளிப்படையாகவே தெரிகின்றது.

காத்தான்குடியில் புலிகள் கொலை செய்ததாக கூறி நினைவுநாள் அனுஷ்டிக்கும் இவர்களுக்கு சத்துருக்கொண்டானில் முஸ்லிம் ஊர்காவற்படையினரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட அப்பாவி 300 தமிழ் இளைஞர் யுவதிகளை மறந்து போனது ஏன்???(இந்த சம்பவத்திற்கு பின்தான் காத்தான்குடி சம்பவம் நடந்ததென அறிகிறேன்) கடைசி அனுதாபம் பற்றி நினைக்க கூட முடியாத அவளிற்கு நினைவிற்கு வாராமல் போனது எப்படி?? ( முஸ்லிம் சகோதரர்களின் படுகொலையை நியாயப்படுத்தவில்லை...ஆனால் பக்கச்சார்பு தன்மையை மட்டுமே கேட்கிறேன்). வெறுமனே வியாபர விமர்சனங்களுக்கு மக்களின் துயரத்திலோ விடுதலையிலோ அக்கறையிருப்பதில்லை என்பதே உண்மை.

முள்ளிவாய்காலில் சிதறிப்போன உறவுகளின் ரத்தத்தை அள்ளித் துடைத்தப்படி தமது வியாபாரத்தை செவ்வனே நடத்தும் இவர்கள் மக்கள் மேல் அக்கறையிருந்தால் இப்போது வன்னியில் நடைபெறும் வன்முறைகளைப்பற்றி எழுதட்டும் பார்க்கலாம்!!! பலவந்தமாக மக்களிடம் இருந்து காணிகளை பறித்தெடுக்கும் சிங்களத்தை தட்டிக்கேட்பதாக ஒரு படைப்பை வெளியிடட்டும் பார்க்கலாம்!!!!! ஆண்களை அடைத்துவைத்துக்கொண்டு பெண்களை பாலியல் துன்புறுத்தும் சிங்கள ராணுவத்தை சர்வதேசம் அறியுமளவிற்கு ஒரு ஆவணம் வெளியிடட்டும் பார்க்கலாம்!!!!

முகாமுக்குள் மக்களை வைத்துக்கொண்டு வர்த்தக சாத்தியமுள்ள ,வளமுள்ள நிலங்களை பலவந்தமாக சிங்கள அரசும் சிங்கள அமைச்சர்களும் பறித்தெடுப்பது இவர்களுக்கு தெரியாதா என்ன!!!!! வெளிப்படையாகவே இத்தனை ஏக்கர் நிலம் அரசுக்கு தேவை என அதிகாரிகளுக்கு கூறி தமிழர்களின் தனியார் நிலம் பறிக்கப்படுவது இவர்களுக்கு தெரியாதா என்ன!!!! தமிழர் கலாச்சார விழுமியங்கள் அழிக்கப்பட்டு பெளத்த சிங்களமயப்படுத்தல் இவர்களுக்கு தெரியாதா என்ன!!!!இப்போது இவர்களுக்கு சாட்சியம் சொல்பவர்கள் சிங்களத்தட்டில் கிரிபத் உண்டுகொண்டிருந்தால் முகாமின் கஞ்சி வாசம் எப்படி தெரியும்??? சமகாலத்தில் நடக்கும் அத்துமீறல்கள் இவர்கள் கண்ணுக்கு தெரியாமல் போனது தமது பிணம் விற்கும் வியாபாராத்தில் வீழ்ச்சி வந்துவிடும் என்பதாலா???

வெறுமனே வியாபாரத்திற்காகவும் சுய சினிமா விளம்பரத்துக்காகவும் தமிழ் மக்களுடைய விடுதலைப்போரில் வீரச்சாவடைந்தவர்களையும்  கொல்லப்பட்ட மக்களையும் தமக்கேற்றபடி ஆவணம் செய்து தமிழர்கள் செய்த ஆயுதப்போராட்டத்தை கேவலப்படுத்துவதனூடாக சிங்கள அரசின் கொலைத்தாண்டவத்தை மனிதாபிமான நடவடிக்கையென சார்புவிமர்சனம் செய்யும் இந்த ஈனப்பிறவிகளை வாசகர்கள் தான் கணித்துக்கொள்ள வேண்டும்.

மா.குருபரன்.
04-09-10

12 கருத்துக்கள்:

  • September 5, 2010 at 9:28 AM

    நல்ல பதிவு குருபரன் .. தொடருங்கள்...
    ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் .. நேரில் நின்று பார்க்காதவர்கள் கூட அதன் வலி உணர்ந்து எழுதுகின்றனர் ..( நேரில் அனுபவப்படாத/அனுபவப்பட்ட எமது சில மக்கள் ,உறவுகள் .." என்ன தம்பி அங்க வன்னி சனம் நல்ல வசதியா இருக்கு இப்ப ", " யாழ்ப்பான சனம் இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை .. நல்ல சந்தோஷமா இருக்கு .." என கூறி வன்னியினதும் மற்றும் சில பின் தங்கிய எமது மக்களினதும் சுயரூபத்தை மறைகின்றனர் . வெளிநாடுகளில் இருந்து பணம் பெறும் வெள்ளவத்தை வாழ் இனம் என்று சொன்னால் மிகையாகாது . இப்படியானவர்களுக்குள் பார்க்காமலே வலி உணர்ந்தவர்கள் மேல் நண்பர் குருபரன் . இப்படியான எம் மக்களை நீங்கள் இன்னும் சந்திக்கவில்லையோ ..நல்ல பார்வை குருபரன் ...ஆனால் "என்ன தம்பி சொல்லுறீங்கள் ? நாங்க இப்ப நல்ல சந்தோசமா இருக்கிறம் ..யாழ்ப்பாணம் நல்ல டேவேலோப் இப்ப " என்று சொல்லும் வெளிநாட்டில் இருந்து பணம் பெறும் ஈனப்பிறவிகள் தான் இதற்க்கு முக்கிய காரணம் ..விமர்சகர்களை விட

  • September 5, 2010 at 1:29 PM

    தவிர்க்க முடியாத படைப்பு குருபரன். தொடர்ந்தும் எழுதுங்கள் யதார்த்தங்கள் வெளிவரட்டும் ..

  • September 11, 2010 at 1:13 PM

    வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி நண்பரே.

  • September 13, 2010 at 4:25 AM

    போரின் வடுக்களும் வலிகளும் இன்னும் மாறவேயில்லை நிறைய காலம் எடுக்கும். தொழில் துறையில் முன்னேற்றம் வேண்டும். குடும்ப் சீர்குலைவு தேடல்கள் காணமல் போனவர்கள் நிறையவே உண்டு. ரணம் இன்னும் ஆறவில்லை. நிறைய வேலைவாய்ப்பு ஏற்படுத்த படவேண்டும் உங்கள் பதிவுக்கும் சமுதாய நோக்குக்கும் நன்றி ..

  • September 18, 2010 at 10:19 AM

    நிலாமது உங்களுடைய வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றிகள்.

  • September 26, 2010 at 10:27 PM
    Anonymous :

    well done Kuru. i have some information i'll contect you. Keep it up.

  • September 27, 2010 at 8:06 AM

    வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் மிக்க நன்றிகள் சுதர்சன் மற்றும் கிருத்திகன்

  • January 28, 2011 at 12:11 PM

    குருபரன், ஹரி ராசலட்சுமிக்கு நீங்கள் கொடுத்திருக்கும் பதிலைத் தொடர்ந்துபோய் இங்கு வந்து சேர்ந்தேன். இனி தவறாது வாசிப்பேன்.

    நிறைய எழுதுங்கள் குருபரன். இம்மாதிரிக் குரல்களின் அவசியம் உணரப்படுகிறது.

  • January 28, 2011 at 12:39 PM

    குருபரன்,

    இந்தப் பதிவை எனது வலைத்தளத்தில் எடுத்துப் போடலாமா? அதற்கு அனுமதியுண்டா?

  • January 29, 2011 at 10:30 PM

    வருகைக்கும் கருத்தாட்டலுக்கும் நன்றி தமிழ்நதி. நிட்சயமாக... உங்கள் வலைத்தளத்தில் இடுவதற்று அனுமதியுண்டு. :)

  • July 27, 2011 at 2:39 AM

    நம் பக்கமுள்ள தவறுகள் விமர்சிக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து. ஆனால், "நம் பக்கமுள்ள தவறுகள்" மட்டும்தான் விமர்சிக்கப்பட வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.

  • July 28, 2011 at 12:43 PM

    வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் மிக்க நன்றி எஸ் சக்திவேல். நிட்சயமாக.. எம் பக்கமுள்ள தவறுகளை மட்டுமே விமர்சிப்பதால் சிலருக்கு ஆதாயம் கிடைக்கிறது.... அதனால் தான் அவர்களை அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க