Friday, September 24, 2010

பல்கலைகழகத்தின் வசந்த கால பொழுதுகள் 3...

5 கருத்துக்கள்
சண்ணா என்கிற பிரசண்ணா…

முதலாம் வருடத்தில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகளை பிறிதொரு பதிவில் சொல்கிறேன்
முதலாம் வருடத்தை படிக்க நினைவுகள் 1, நினைவுகள் 2


வவுனியா வளர்த்தெடுத்த வீரப் புதல்வன் இவன். 2005 ற்கு பின் 4 வருடங்களுக்கு பல்கலைக்கழகத்தில் எமது பிரிவில் அதுவும் தமிழ் மாணவர்களிடையில் இவன் மிகப்பிரபலம். எனது பல்கலைகழக வாழ்வில் முதலில் சந்தித்த எமது வகுப்பு மாணவனும் இவன்தான்.

 தலைக்கு வைக்கிற ஜெல்

  “சிக்கின்” கறி 

 எக்ஸாம் தலையிடி

 எக்ஸாம் போஸ்டர்

 வவுனியா 10 ரவுடிகளில் ஒருத்தன்

 வவுனியா மாவட்ட ஓபின் ஃபட்ஸ்மன்

 வவுனியா மாவட்ட 200 மீட்டர் ஓட்ட பந்தய சம்பியன்

 ரஜனி நடித்த யக்குபாய் படத்தின் கள்ள டீவிடீ வச்சிருந்தவன்

 ரயில் காமடி

 இவன் ஒருக்கா பாத்தாலே கன பொம்பிள பிள்ளைகள் இவனில   இதாகிற அளவுக்கு….

 மப்பு காமடி

என இவன் விட்ட வெடிகள் புலுடாக்கள் வதைகள் கொஞ்சநஞ்சமில்ல.

இவன் பொதுவாக தனது வெடிகளை பிளான் பண்ணிதான் வெடிப்பான். யாராவது தனியாக இருந்தால் அவர்களிடம் சாதாரணமா கதைவிடுவது பிறகு தான் வெடிக்கப்போகும் மேட்டரை சாதுவா ஓபின் பண்ணிட்டு நைசா தன்ட வெடிய போட்டுத்தள்ளிட்டு மெதுவா கழர்றது அவன் ஸ்டரஜி. இவனின் வெடிகளில் அதிகம் மாட்டுப்பட்டது ஹிலாலும் சஞ்சயனும் தான். எங்களோடு றூமில் இருந்ததால் எமக்கு வெடிப்பதை வெகுவாகவே தவிர்த்திருந்தான். மாறாக வெடித்தால் நாம் கூடி கும்மியடிப்பது வழமை.

அண்டைக்கு இப்பிடித்தான் டிப்பாட்மன்ட் கிரிக்கட் மச்சுகு பயிற்சி எடுப்பதற்காக எல்லாரையும் மைதானத்துக்கு வரச்சொல்லியிருந்தோம். ஹிலாலும் இவனும் நேரத்துக்கு போய்ட்டாங்கள். அங்கதான் சண்ணா தன்ட முதலாவது டாக்கட்ட செலக்ட் பண்ணியிருந்தான். ஹிலால் மாட்டி…….. ஏதோ படத்தைப்பற்றி கதை தொடக்கிய சண்ணா அதில் வந்த வில்லனையும் அவனுடைய ரவுடிசத்தை பற்றியும் மெச்சியிருக்கிறான். அதை செப்பிக்கொண்டிருந்த GAP க்குள்ள வவுனியாவில 10 ரவுடிகளுக்குள்ள தானும் ஒருத்தன் என்டிருக்கிறான். வெலுவெலுத்போன ஹிலால்…அவனிடம் எதுவும் கேக்கல. கொஞ்ச நேரத்தில அதெப்பிடி கரக்டா 10 பேருக்குள்ள ஒருத்தன் எண்டு சொல்றாய் என்று கேட்ட ஹிலாலுக்கு நெஞ்சு “பக்” என்ற அளவுக்கு அவன்ட பதில் இருந்தது. எச்சரிக்கை என்று வவுனியாவில் எழுதி ஒட்டப்பட்ட 10 ரவுடிகளில் தன்ட பேரும் இருக்கு என்டிருக்கிறான். அது சரி ஆரு எழுதி ஒண்டினது என்டு கேக்க சொல்லிருக்கிறான் “ஒருத்தரிட்டையும் சொல்லாத… எழுதி ஒட்டினது புலிகள்” என்று. வெலுவெலுத்து போன கிலால்… சத்தம்போடாம இருந்திருக்கிறான். இம்மாம்பெரிய ரவுடி உப்புடி சிம்பிளா சைலண்டா இருக்கிறானே என யோசித்த ஹிலால்… மற்றாக்களிட்ட எப்பிடி சொல்றது என்று ஆதங்கப்பட்டிருக்கையில்தான்..அந்த இடத்துக்கு சிவா வாறான். சிவாவிட்ட ஹிலால் மேட்டர சொல்லியிருக்கிறான்…. சிவா ஹிலால் தன்ன கலாக்கிறான் எண்டு கணக்கில எடுக்கல.அதால கதை உடன வெளில வரல.


திருப்பி ஒரு 2 நாள் கழிச்சு திரும்பவும் ஹிலால் தனிய மாட்டி…..சண்ண நல்லா பந்து போடுவான்..ஆனா தனிய ஹிலாலோட கதைச்சுக்கொண்டிருக்கேக்க சொல்லியிருக்கிறான்…உம்மையில நான் போலர் இல்ல..வவுனியாவில ஓபின் ஃபட்ஸ்மன் என்டு. அப்ப ஹிலால் இவ்ளவு நாளா இவனுக்கு ஃபட்டிங் சான்ஸ் குடுக்கல தானே பின்னேரம் விளையாடேக்க குடுப்பம் என்டு பின்னேரம் மைனர ஓபினா இறக்கியாச்சு….அப்பதான் விளங்கிச்சு…. என்ன காமடியெண்டா பண்ணிக்கு ஒழுங்கா ஃபட் பிடிக்கவே தெரியாது. அதுக்குள்ளையும் விட்டான் பாருங்க அடுத்த வெடி…ஹாட் போல்ல விளையாடி பழகினதால ரெனிஸ் போல்ல கொஞ்சம் கஸ்டமா இருக்கெண்டு.......



சண்ணா என்ற பிரசண்ணா....... தொடரும்

மா.குருபரன்
24-09-10

5 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க