என் வீடு
சிதைக்கப்பட்டுக் கிடக்கிறது....
என் வீதி
திருடப்பட்டுக் கிடக்கிறக்கிறது...
என் சொந்தங்கள்
பிரிக்கப்ட்டுக் கிடக்கிறது..
எந்த முற்றத்தில் நான்
பட்டாசு கொழுத்துவது..
யாருக்காக பட்டாசு கொழுத்துவது...
நான் பட்டாசு
கொண்டோடிய தெருக்களிலெல்லாம்
இப்போது காவலரண்களே!!!
எப்படி நான்
பட்டாசோடு என்
சந்தியில் நிற்பேன்...
பட்டாசு காணாத காலத்திலும்
சைக்கிள் கம்பியும்
தீக்குச்சி மருந்துமாய்
வெடி வெடித்தோம் நாம்...
அப்போது
எல்லாமே என் தெருக்கள்
என் சந்திகள்
எந்த காவலரணும் கிடையாது
எந்த இயந்திர துப்பாக்கியும் கிடையாது
எமது
சத்தங்கள் குறித்து
யாரும் குற்றம் சொல்லவில்லை...
யாரும் ஏதும் செய்வர் என்ற
அச்சமும் இருந்ததில்லை...
எந்த இரவுகளுக்கும்
அஞ்சியது கிடையாது....
எல்லாமே பறிக்கப்ட்டுவிட்டது
என் சுதந்திர உணர்வும் கூட..
எந்த முற்றத்தில் நான்
பட்டாசு கொழுத்துவது
யாருக்காக பட்டாசு கொழுத்துவது???
நிட்சயமாக
என் உணர்வுகளுக்காய்
பட்டாசு கொழுத்த முடியாது...
எல்லாமே பறிக்கப்பட்டுவிட்டது
என் சுதந்திர உணர்வும் கூட...
மா.குருபரன்
5-10-2010

" Happy Dewali' என்று குறுஞ்செய்தி அனுப்புவருக்கும் "Facebook" சுவரில் எழுதுபவர்கும் பதில் அளிக்கும் ஒரே கவிதை இதுதான். மிக்க நன்றி.
இது வாழ்த்து சொல்வதற்கான மாதம் அல்ல.... காவியமாகி... கல்லறை கூட இடிக்கப்பட்ட அந்த தெய்வங்களை நினைந்துருகும் மாதம் .
//இது வாழ்த்து சொல்வதற்கான மாதம் அல்ல.... காவியமாகி... கல்லறை கூட இடிக்கப்பட்ட அந்த தெய்வங்களை நினைந்துருகும் மாதம்//
கனவுகள் நிஜமாக வேண்டும்... நிஜமாகும்... தவிர்க்கப்பட முடியாத பிரசவம்...
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி நண்பரே.
தீபாவளி எங்களுக்கெல்லாம் “வலி“தருவதே. அதில் கொண்டாட என்னதான் இருக்கிறது? கனவு மெய்ப்படும் காலம் வரவேண்டும்.