உணர்வுகளின் கல்லறைகளை
உருக்குலைத்தார்கள்.....
கனவுகளை சிதைத்து
வெட்டி வீசி எறிந்தார்கள்..
அவர்களே தின்று பிய்த்துப்போட்ட
அவளின் பிணத்தை
"மாறு கெல்லு" என்றார்கள்..
பிணமாய் விழுந்து கிடந்த
அவளின் மார்பகத்தை
விலத்திப் பார்த்தார்கள்
குதூகலித்தார்கள்...
மீண்டும் மீண்டும் பார்த்தார்கள்..
வளிந்து கிடந்த
அவளின் ரத்தம்
மண்ணில் பரவியபடியால்
அதை அள்ளி ருசிப்பதற்கு
யோசித்துக் கொண்டிருந்தார்கள்...
அவளின் ரத்தத்தை அவர்கள்
கட்டாயம் ருசித்திருக்க கூடும்...
அவர்களில் சாத்தானேறிய
மிருகவாடை தெரிந்து
கொண்டே இருக்கிறது...
*************************************
அவளின் ரத்தத்தை குடித்த அவனே
அவள் அம்மாவை
தன் அம்மா என்கிறான்...
அவள் தங்கையை தன் "நங்கி" மாதிரியென்கிறான்...
"அப்பி ஒக்கம எக்க ரட்ட" என்கிறான்...
இவனை எப்படி நான் அனுமதிப்பேன்
என்கிறான் அவளின் தம்பியும் அண்ணனும்..
அண்ணனுடனும் தம்பியுடனும்
இணைந்து கொள்கிறாள் அவளின் தங்கையும்...
இவர்களோடு இணைந்து கொள்கிறார்கள்
இவர்களின் உறவுகள்...
உறவுகளின் நண்பர்கள்...
நண்பர்களின் நண்பர்கள்...
எல்லாரிடமும் ஒரே கேள்விதான்....
சாத்தானுகள் குடியேறியுள்ள
மிருகங்களோடு
மனிதர்கள் நாம் எப்படி வாழ்வது...
புணர்ந்து பிணமாக்கிய பெண்ணை
மீண்டும் புணர்ந்து ருசிக்கும்
சிங்களப் புத்தனை
எப்படி எம்மண்ணில் அனுமதிப்பது???
பிணம் தின்று ருசிகண்டு
வெறிபிடித்த மிருகத்தை
எப்படி வீட்டில் வைத்திருப்பது???
மா.குருபரன்
04-12-2010
//வெறிபிடித்த மிருகத்தை
எப்படி வீட்டில் வைத்திருப்பது???/
உணர்வுகளை பிரதிபலிக்கும் கவிதை.மனதில் இரத்தம் வருகிறது.
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் மிக்க நன்றி நண்பரே.