ஜில்லென்று பெய்தோந்த
ஒரு
மழைப் பொழுது...
வீதியெங்கும்
உதிர்ந்து
பரவிக் கிடக்கும்
கொண்டற் பூக்கள்....
குடையைச் சுழற்றி
தூறல்களை தூவியபடி
நீ சென்ற
சாலை...
மௌனத்தில்
மூழ்கித்தவிக்கும்
எனக்கும் உனக்குமிடையிலான
பார்வைகள்..
நினைக்கும் போதெல்லாம்
இன்னமும்
மனசெல்லாம்
பனி ஊறிய புல்லின்
குளிர்ச்சி.....
மீண்டும் ஒரு தடவை
யாசிக்க வேண்டும்
அந்த நாட்களை.....
மீண்டும் மீண்டும்
தொலைக்க வேண்டும்
இரவுகளை.....
மா.குருபரன்
22-05-2011
அதுசரி எப்ப முதலில இரவை தொலைச்சீங்க?
ஹா ஹா ஹா... அது ஒரு கனாக்காலம் கார்த்தி...