நிசப்தம் நிரம்பி
மெளனம் குடிகொண்ட
இந்த நாட்கள்,
நாளைகளில்
நினைவுகளாக்கப்ட்டிருக்கும்....
எனதும் உனதும் வார்த்தைகள்
அங்கு பேசிக்கொண்டிருக்கும்....
குழந்தையாய்
துள்ளிக் குதித்த காதல் - அங்கு
நினைவற்று வீழ்ந்து கிடக்கும்...
பொய்த்துப்போன - உன்
வார்த்தைகளின் மொழி
இந்தக் குழந்தைக்கு
புரியப்போவதில்லை....
என் மார்போடு
முகம் புதைத்து
அழுதுகொண்டிருந்த
இந்த காதல் குழந்தையின் வலி
உனக்கும் புரியப்போவதில்லை...
நிறங்கள் வெளிறிப்போய்
நீல வானமாய்
நீண்டு கிடக்கும்
வானவில்லைப் போல
மெளனம் விழுங்கி
கண்ணீர் வற்றி
மூச்சிரைத்து கிடக்குதடி
நீ வளர்த்த காதல்....
மா.குருபரன்
20-07-2011

ஃஃஃஃபொய்த்துப்போன - உன்
வார்த்தைகளின் மொழி
இந்தக் குழந்தைக்கு
புரியப்போவதில்லை....ஃஃஃஃ
உணர்வுபூர்வமா வரிகள் குரு ரசித்துச் சுவைத்தேனுங்க..
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் மிக்க நன்றி சகோதரா