Wednesday, August 3, 2011

விம்பம்

4 கருத்துக்கள்

தமிழும் அதன் நிலமும்
இருளாக்கப்படுகிறது என்கிறேன்,
நீயோ
இரவுகள் இனிமையானவை என்று
கவி பாடிக் கொண்டிருக்கிறாய்...

நானும் நீயும்
தவண்டு,
புட்டிப்பால் குடித்து புரண்டெழுந்து,
எம் தமிழ்
கூவித் திரிந்த தெருக்களெல்லாம்,
எனதும் உனதும்
மொழி நசுக்கப்ட்டு
பிரித் ஓதப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிறேன்,
புத்தன் தமிழுக்கு எதிரியில்லை என்று
அறம் சொல்கிறாய்...

உனக்காய் நீ தமிழ் எழுதினால்
இலக்கியவாதி,
தமிழுக்கும் நிலத்திற்குமாய்
நான் எழுதினால்
பயங்கரவாதி...

தமிழும் அதன் நிலமும்
இருளாக்கப்படுகிறது என்கிறேன்.
நீ மோசமான இனவாதி என்கிறாய்.


நீ எப்படியாவது இருந்துவிட்டுப் போ - ஆனால்
தேமதுரத்தமிழ் என் தாய் மொழி....


மா.குருபரன்

03-08-2011


4 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க