Sunday, January 11, 2015

மைத்திரியின் கன்னி உரை சொல்வது என்ன?

0 கருத்துக்கள்

மைத்திரியின் கன்னி உரையில்: சிங்களத்தில் "த்ராவிட ஜாதிக சந்தான" என்றால் தமிழில் "தமிழின கட்சிகள்" என்று பொருள்படும் என சிங்கள-தமிழ் அகராதியில் இருப்பதாக சொல்கிறார்கள் (ஹி ஹி ஹி எண்டு சிரிக்கப்படாது)  ‪#‎எது‬ எப்பிடியோ இந்த புலுடாக்கள் சம்மந்தரிடம் எடுபடாது என்று நம்பலாம்.
(ஆனந்த சங்கரியின் த.வி கூட்டணி, மனோகணேசனின் ம.ம.முன்னணி மற்றும் த.தே.கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்திருந்தன)

அரச அதிபரின் உரைகளின் ராஜதந்திர செய்திகளை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். "முஸ்லீம் கட்சிகள்" என்று சொல்லாமல் தனித்தனியாக பிரித்து சொன்னதற்கும் காரணம் இருக்கலாம்.

விடுதலைப்புலிகளின் அறிக்கைகளில் "சிறிலங்கா அரசாங்கம்" "பேரினவாத கட்சிகள்" போன்ற சொற்கள் பாவிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

மைத்திரியின் கன்னி உரையை ஆய்விற்குட்படுத்தாது அதை வெறும் செய்தியாக தமிழ் ஊடகங்கள் பார்ப்பது மக்களிடையில் காணப்படும் ஊடக வறுமையை காட்டுகிறது.

தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் மைத்திரியின் கன்னி உரை குறித்தான அரசியல் பார்வையை வெளிப்படுத்த வேண்டும்.

மா.குருபரன்
11-01-2015

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க