Sunday, May 3, 2015

"முறிந்த பனை" என்று ஏன் பெயர் வைத்தார்கள்??? யோசி யோசி....

0 கருத்துக்கள்



முறிந்த வேம்பு என்றோ முறிந்த பலா என்றோ பெயரை வைக்காமல் முறிந்த பனை என்று ஏன் பெயர் வைத்தார்கள்??

ஏன் முறிந்த தென்னை என்று கூட பெயர் வைக்கவில்லை? அது தான் எய்தவனின் இலக்கு.

பனையோ தென்னையோ முறிந்தால் வளராது. அதிலும் பனை என்பது ஈழத் தமிழர்களின் உளவியல் ரீதியிலான குறியீடு. அதாவது ஈழத்தமிழர்களின் போராட்டமானது முறிந்துவிட்டது என்றும் அது இலக்கை அடையக்கூடாதென்றும் 87ம் ஆண்டு நாலுபேரடங்கிய குழு எழுதியது.

1.யாரிந்த நாலுபேர்?

2. யார் அவர்கள்.?

3. ஏன் இப்படியொரு புத்தகம் எழுதவேண்டும்?

4. ஏன் விடுதலைப்புலிகளை "மட்டுமே" மோசமாக குற்றம்சாட்டி புத்தகம் எழுதவேண்டும். அந்தப் புத்தகம் ஏன் "1996ம் ஆண்டு" வெளிவர வேண்டும்?

5. இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு உதவியவர்கள் யார்? உதவியர்வர்கள் அதற்கு பிறகு தமிழ் மக்களின் அவலங்களில் எப்படியான கரிசனையை கொண்டிருக்கிறார்கள்?


 இப்படி ஏராளமான கேள்விகள் புதையுண்டுகிடக்கின்றன.  இதை பேசியே ஆகவேண்டும். ஏன் இதை பேச வேண்டும் என்பதையும் எனக்கு எப்படி இந்த புத்தகம் மீது சந்தேகம் வலுத்தது என்பதையும் சொல்லிவிட்டு விடையத்திற்கு வருகிறேன்.

1987ம் ஆண்டு யாழ்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ராஜினி திராணகம என்ற மருத்துவ உடற்கூற்றியல் நிபுணரால் எழுதப்பட்ட (அல்லது எழுத தொடங்கபட்ட) முறிந்தபனை தொகுப்பானது சில பல திருத்தங்களுடன் 1996இல் வெளியிடப்ட்டது.

விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் இருந்த காலத்தில் மக்களிடையே கொண்டு சேர்க்க முடியாமல் போன இந்த புத்தகத்தை மீண்டும் தூசி தட்டி எடுத்துக் கொண்டு சிலர் அங்கும் இங்குமாக பேசுவது தெரிந்ததால் தான் இதை எழுதவேண்டும் என்று எண்ணத் தோன்றியது.

முறிந்த பனை எழுதிய அனைவருமே சீன கம்யூனிச (ரஸ்ஸிய கம்யூனிச குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்தான்) குழுவைச் சேர்ந்தவர்கள். அதாவது தமிழ் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுக்க முதலே ஆயுதக் குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்தான் இந்த குழுவினர். ஜே.வி.பி போன்ற தென்னிலங்கை ஆயுதக் குழுக்களின் வடகிழக்கு பிரதிநிதிகள் போன்றவர்களே அவர்கள்.

ஏன் இவர்கள் தமிழர்களின் விடுதலைப்போராட்டம் நசுக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள் என்பதை விளங்கிக் கொள்ளல் இலகுவானதாக இருந்தாலும் அவர்கள் செய்த நயவஞ்சக அரசியல் சித்தாந்தமானது மிக நுட்பமானதும் மோசமானதும் ஆகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மே.த.கு பிரபாகரன் உள்ளிட்ட தமிழர் போராட்டக் குழுக்களின் தலைவர்கள் அனைவருமே சேகுவேரா உள்ளிட்ட கம்யூனிச புரட்சியாளர்களின் வரலாற்றுப் படிப்பினைகளால் கவரப்பட்டவர்களே. ஆரம்பகால புகைப்படங்களைப் பார்த்தால் சேகுவேராவின் படமும் இருப்பதைக் காணலாம். ஆனால் அந்த கம்யூனிசப் போக்கானது ஒன்றுபட்ட இலங்கையின் வர்க்கப்போராட்டங்களுக்கு மாத்திரமே ஒத்துவரும் ஆனால் தமிழர்களின் இன விடுதலைக்கு சரிவராது
என்ற யதார்த்த கருத்தியல் தலைவர்களிடத்தில் வளர்ந்தமையால் காலப்போக்கில் அது கைவிடப்பட்டிருக்கலாம்.

சோவியற் யூனியன் உடைவிற்கு பின்னர் உலகத்தில் கம்யூனிசம் என்பது உடைந்துவிட்டது என்பதே உண்மை. சீனாவில் ஆழும் கட்சி கம்யூனிசக் கட்சியாகவும் இராணுவம் மக்கள் இராணுவமாகவும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறதே தவிர சீனா என்பது வர்க்க பேதங்கள் மோசமாக கொண்ட ஒரு முதலாளித்துவ பாசிச நாடு. அதே போல் ரஸ்ஸியாவம் பெயரளவில் கம்யூனீச கட்டமைப்புகளை வைத்திருக்கிறதே தவிர அதுவும் ஒரு முதலாளித்துவ பாசிச நாடு. இப்படி கம்யூனிசமானது முதலாளிகளால் உடைத்தெறியப்ட்டு நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. இன்று கம்யூனிசம் இருப்பது கட்சிப் பெயர்களிலும் கட்சிக் கொடிகளிலும் மாத்திரமே!!


சரி விடையத்திற்கு வருகிறேன்!!

சீன கம்யூனிசக் கட்சியில் இருந்து பிரிந்து ரோகண விஜயவீர ஜே.வி.பி என்ற கட்சியை தொடங்கினார் (ரஸ்ஸிய ஆதரவு). ரஸ்ஸிய ஆதரவு ஜே.வி.பி இன் 1971 ஆயுதப் புரட்சியை அடக்க சீனாவும் இந்தியாவும் உதவியமை குறிப்பிடத் தக்கது.

இப்படி சீனா கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் இல்லாமல் போனது மட்டுமல்லாது ஜே.வி.பியை தொடர்ந்து வட கிழக்கிலும் தமிழர்கள் ஆயுதப் போராட்டங்களை தொடங்குவதை அரசாங்கம் விரும்பவில்லை. அது போக வடகிழக்கு தமிழர் போராட்ட அமைப்புகளுக்கு இந்தியா ஆதரவளிப்பதையும் இலங்கை அரசோ சீன கம்யூனிஸ்டுகளோ விரும்பவில்லை. அதனால் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை பிழை என்ற கருத்தியலில் பல இதரப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

ராஜினி திராணகம, ராஜன் கூல், தயா சோமசுந்தரம், கே.சிறிதரன் போன்றவர்கள் சீன கம்யூனிஸ்ட் குழுவைச் சேர்ந்தவர்கள்.  தமிழர் அரசியல் நலனில் அக்கறை கொண்டவர்களாக அறிக்கைகளை விட்டிருந்தாலும் சிறிலங்கா அரசின் மனிதஉரிமை மீறலை, தமிழர்கள் மீதான உரிமை மறுப்பை இவர்களால் காட்டமாக முன்வைக்க முடியவில்லை.

சிறிலங்கா அரசானது யாழ் குடாநாட்டை கைப்பற்றி லட்சக்கணக்கில் மக்களை இடம்பெயரச் செய்து கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்து ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்களை பலியெடுத்து நூற்றுக் கணக்கான தமிழ் யுவதிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய 1996ம் ஆண்டு தான் இந்த சீன கம்யூனிச குழு "முறிந்த பனை" என்ற நூலை வெளியிட்டது.

சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களையும் இன அழிப்பையும் சர்வதேச மட்டத்தில் மறைப்பதற்கான முதல் முயற்சியாக இந்த "முறிந்த பனை" 1996இல் வெளியிடப்பட்டது.

ஹிவோஸ் (HIVOS) என்ற மனித உரிமை சம்மந்தமான "அரசார்பற்ற" நிறுவனத்தின் நிதி உதவியுடன் முற்றுமுழுதாக சிங்கள புத்திசீவிகளால் வடிவமைக்கப்பட்ட "முறிந்த பனை" யாழ்ப்பாணத்தை சிறிலங்கா அரசு கைப்பற்றிய உடன் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த  ஹிவோஸ் (HIVOS) என்ற மனித உரிமை அமைப்பு "முறிந்த பனை"க்கு நிதி உதவி வழங்கியதே தவிர பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஏதாவது உதவிகள் செய்ததா என தெரியவில்லை.

தவிர "முறிந்த பனை" யில் ஏன் புலிகளை மாத்திரம் மோசமாக விமர்சிக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை மிக இலகுவானது. விடுதலைப்புலிகளைத் தவிர ஏனைய எல்லா இயக்கங்களும் இந்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் மற்றும் இந்திய நிதியில் இயங்கிய அமைப்புகள். சுயமாக இயங்க முடியாத அந்த அமைப்புகள் தொடர்ந்து வடகிழக்கில் இயங்கினால் தனி நாட்டுக் கோரிக்கை வலப்பெற முடியாது எனவே அவை வடகிழக்கில் இருக்க வேண்டும் என்பது சீன கம்யூனிஸ்டுகளின் எண்ணம். சுயமாக இயங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பு என்றாவது ஒருநாள் பிராந்திய ஆதிக்க சக்திகளுடன் இணைந்து தனி நாட்டுக்கிற்கான கோரிக்கையை வலுப்படுத்திவிடும் எனவே அதை அழிக்க வேண்டும் அல்லது மக்களால் நிராகரிக்கப்பண்ண வேண்டும் என்று சிறிலங்காவின் சீன கம்யூனிஸ்டு குழுவிற்கு இருந்த கருத்தாக்கம். அதன் தாக்கத்தால் தான் "முறிந்த பனை" முழுவதும் புலிகளை மிக மோசமாக விமர்சித்திருப்பார்கள்.

"முறிந்த பனை" எழுதியவர்கள் 2009ற்கு பிறகு "விழுந்த பனை" என்ற புத்தகத்தையும் வெளியட்டு தமது வெற்றியை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது முறிந்த பனை விழுந்துவிட்டது என்பதே அதன் அர்த்தம்.

உலகில் விடுதலை பெற்ற எல்லா இனங்களும் பெரும் தோல்விகளில் இருந்து தம்மை கட்டியெழுப்பியவர்களே.

ஜேர்மன்,பிரான், ரஸ்யா, யூதனின் இஸ்ரேல், ஈரான், அசைபர்ஜான் இப்படி இன்னும் பல நாடுகள் இருக்கின்றன.

ஒரு இனம் அழிந்து குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்ததை கொண்டாடவும் அதை அரசியலாக்கவும் நன்கு கற்றுத் தெளிந்தவர்கள்தான் இன்றைய கம்யூனிஸ்டுகள்.

வடகிழக்கில் கம்யூனிஸ்டுகள் வருவார்கள். செம்பை எடுத்து உள்ளே வை!!!


மா.குருபரன்
03-05-2015


குறிப்பு: ராஜினி சிங்கள மருத்துவர் என்று எழுதியது திருத்தப்பட்டிருக்கிறது. 

இந்த பதிவிற்கு வந்த ஆரோக்கியமான கருத்தூட்டல் ஒன்றை இதனுடன் இணைக்கிறேன்.








0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க