Sunday, May 10, 2015

தமிழினத்தை சுற்றிக் கொட்டப்பட்டிருக்கும் ஊடக குப்பைகள்

0 கருத்துக்கள்
எதை நம்புவது என்று தெரியாமல் மக்கள் குழம்ப வேண்டும் என்பதே அரசுகளின் தேவை என்பதை காட்டுவதான ஒரு படம்

பர்மாவில் சுதந்திரம் கேட்டு போராடிய கரேன் மற்றும் ஆரக்கன் இனங்களின் போராட்டத்தை அடியோடு அழித்த இந்தியா அந்த மக்களிடையே சுதந்திரம் பற்றிய கருத்துருவாக்கத்தையோ விடுதலைபற்றிய கருத்துருவாக்கத்தையோ உருவாக விடாமல் பார்ப்பதற்கு ஊடகங்களை பயன்படுத்திக் கொண்டது. அதாவது ஒரு செய்தியை பலதரப்பட்ட ஊடகங்களில் வித்தியாசம் வித்தியாசமாக சொல்லி மக்களை குழப்பும் உத்தியை இந்திய அரசாங்கம் செய்து வெற்றிகண்டது. இந்த விடையத்தில் இந்திய அரசும் இந்திய ஊடகங்களும் இந்திய ஊடகவியலாளர்களும் மிக தேர்ச்சியானவர்கள்.

கரேன் மற்றும் ஆரக்கன் இன போராட்டங்களை இந்தியா அழித்த விதம் பயங்கரமானது. அந்த இனங்களின் போராளி குழுக்களின் தலமையை பேச்சுவார்த்தை என அழைத்து பேசந்சுவார்த்தைக்கு வந்தவர்களை கைது செய்து படுகொலை செய்தது. எஞ்சிய போராளிகளை கைது செய்து அந்தமான் தீவு சிறைகளில் அடைத்தது. அவர்களில் ஆயிரக்கணக்கானோர் 2004ம் ஆண்டு சுனாமியிலும் செத்துப்போனதாக பதிவுகள் இருக்கின்றன. இன்னமும் ஆயிரக்கணக்கான போராளிகளை அந்தமான் தீவு சிறைகளில் வைத்து இந்திய அரசு கொடுமைப்படுத்துவதாகவும் அடிமைகளாக வைத்திருப்பதாகவும் பல பதிவுகள் இருக்கின்றன.

சரி விடையத்திற்கு வருவோம்!!

உலகில் வெற்றியடைந்த மக்கள் போராட்டங்கள் புரட்சிகள் மாற்றங்கள் எல்லாமே சிறந்த தகவல் பரிமாற்றங்களாலும் மிகச்சிறந்த அரசியல் வழிகாட்டலாலும் நிகழ்ந்தவை. இவை எல்லாவற்றிற்கும் முதுகெலும்பாக இருந்தவை ஊடகங்கள்.

கார்ல் மாக்ஸ், லெனின், மா சேதுங், சே குவேரா, விடுதலைப்புலிகள் என எல்லோரின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்புகளிற்கு பின்னால் ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. மக்களிற்கு உண்மையான செய்திகளை வழங்குவது மட்டுமல்லாது சரியான அரசியலையும் சொல்ல வேண்டிய கடமை ஊடகங்களுக்குதான் இருக்கிறது.

அச்சு ஊடங்களால் அரசியல் சிந்தனைகள் பரப்பப்பட்டு வந்த காலம் போய் இன்று இலத்திரனியல் ஊடகம் ஆதிக்கம் செலுத்தும் யுகம் நடந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக ஈழத்தில் 2009 ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ் மக்களை சுற்றி பின்னப்பட்ட ஊடக வலையானது பெரும் நோக்கங்களை கொண்டாக இருக்கலாம். பர்மிய ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த இந்திய அரசு அங்கு போராடிய மக்களின் அரசியல் சிந்தாந்தங்களை அழிக்க ஊடகத்தையே பயன்படுத்தியது. அப்படியான ஒரு நிலைதான் இன்று ஈழத்திலும் உருவாக்கபட்டிருக்கிறது.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடையம் என்னவென்றால் இன்றைய இளைஞர்களிடையே அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் பெரும் வரவேற்பை பெறுவதில்லை என்பதோடு எம்மைச் சுற்றி நடக்கும் விடையங்களை அலசி ஆராயும் பக்குவமும் இளைஞர் யுவதிகளிடையே இல்லாமல் போயுள்ளமையானது இணையதாரர்களுக்கு வாய்ப்பாக உள்ளது.

உங்களுக்கு நன்கு தெரிந்த அல்லது முகவரி உள்ள, ஊடகத்தன்மை உள்ள செய்திகளை மட்டும் வாசியுங்கள் அதை மட்டுமே மற்றவர்களுடன் பகிருங்கள். அநாமேதய செய்திகள் மக்களிடையில் குழப்பங்களை மட்டுமே உருவாக்கும்.

சமூகவலைத்தளங்களில் எல்லோருமே ஊடகவியலாளர்கள் ஆகிவிட்ட நிலையில் செய்திகளை ஆராய்ந்து வாசிக்க வேண்டியது எல்லோருக்கும் கட்டாயமான ஒன்று.

நான் அடிக்கடி இணையங்களில் கண்ட செய்தி இணையங்களை இணைத்திருக்கிறேன். இதில் எத்தனை நம்மபகத்தன்மையானவை எத்தனை உண்மையான ஊடகங்கள் என்று யாருக்கு தெரியும்?? அதனால் சரியான ஒரு ஊடகத்தையோ சரியான சில ஊடகங்களை மட்டுமே வாசியுங்கள்.

என் கண்ணில் படாத இன்னும் ஏரானமான ஊடகங்கள் இருக்கலாம்.

A
athirady.com
athirvu.com
adaderana.lk
athavannews.com
asrilanka.com


B
battinaadham.com


C

D
dailyjaffna.com

E
e-jaffna.com
eprlfnet.com - பத்மநாபா அணி
epdpnews.com


F

G
globaltamilnews.net


H


I
inioru.com


J
jafffnanet.com

K



L
lankann.com


M
manithan.com
malarum.com

N
newjaffna.com
nitharsanam.net
neruppu.com
newjaffna.com
ndpfront.com


O


P
pathivu.com
plotenews.com

Q


R


S
sankathi.com
senkettru.com
sonakar.com

T
tamilnet.net
tamilwin.com
tamilcnnlk.com
tamilcnn.ca
tamilnewslk.com
tamilneethy.com
thenee.com
ttnnews.com
tamilmirror.lk
tamilnet.com


U
uthayan.com


V
viruviruppu.com
visarnews.com
velichaveedu.com
virakesary.lk
vivasaayi.com

X


Y
yarlnatham.com


மா.குருபரன்
10-05-2015

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க