ஒற்றையாட்சி இன நல்லிணக்கம் என்பது இலங்கையில் ஒருபோதும் உருவாகாது அது தான் நில அரிசியலின் விதி. இது ஒரு இயற்கைச் சமூகவியல் சமன்பாடு. அதை அரசியல்வாதிகளாலோ அரசுகளாலோ மாற்ற முடியாது.
இலங்கை என்பது பலாத்காரமாக இணைக்கபட்ட இரண்டு வேறுபட்ட நில அரசியலின் கூட்டுச்சேர்க்கை.
பிராந்திய அரசியல் சக்தியின் இன்றியமையாத தேவை வரும்போது பூகோள அரசியல் இலங்கையின் இரண்டு நிலங்களையும் பிரிக்கும்.
மேற்கத்தைய கம்பனிகளால் பலாத்காரமாக இணைக்கப்பட்ட பாகிஸ்தான் என்ற தேசம் பாரதத்தில் இருந்து பிரிந்து போக எப்படி தேவை ஏற்பட்டதோ!!! பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஸ் பிரிந்து போக எப்படி தேவை ஏற்பட்டதோ அதைவிட வலுவான தேவைகளும் உரிமையும் பலாத்காரமாக இணைக்கட்ட நிலங்களுக்கு இலங்கையில் காணப்படுகிறது.
பலாத்காரமாக சேர்க்கப்பட்ட நில அரசியல் என்பது ஒரு போதும் இன நல்லிணக்கங்களை ஏற்படுத்தாது. அப்படி நடந்தால் அது சமூகவியலுக்கு முரணானது. விஞ்ஞானம் கூட சில வேளைகளில் பொய்த்துப் போகலாம் ஆனால் இயற்கைச் சமூகவியல் பொய்த்துப் போகாது.
மண்ணும் அதன் பூர்வீக மக்களும்தான் அதற்கான அரசியலை தீர்மானிப்பார்கள். இடையில் "இன நல்லிணக்கம்" "மொழி நல்லிணக்கம்" "தடை" "நல்லாட்சி" "தண்டனை" "குடியேற்றம்" இப்படி பலதரப்பட்ட செயற்பாடுகளானது பிராந்திய அரசியலின் தேவைக்கேற்ப நடைபெறும் ஒன்று. அது நிலையானது அல்ல. சமூகவியல் பொய்த்துப் போகாது.
பலாத்காரம் செய்யபட்டு உருவாக்கபட்ட இலங்கை ஒற்றையாட்சி என்ற நாடு "இன நல்லிணகத்திற்கான" உதாரணமாக இந்த நூற்றாண்டில் அல்ல எந்த நூற்றாண்டிலும் சாத்தியமாகாது.
மண்ணை நம்பு. அதுதான் அரசியலை கற்பிக்கும். இயற்கைதான் உண்மையான மக்களின் அரசியல் தலைவன்.
வெற்றிகளை கொண்டாடுவதிலும் பார்க்க தோல்விகளில் இருந்து பாடம் கற்று மாற்று முயற்சிகளை அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கும் இனங்கள்தான் வெற்றியை இலகுவாக கடக்கும்.
நமது நிலம் நிரந்தரமானது. அதன் மீதான ஆக்கிரமிப்பை எப்படி அகற்றப்போகிறோம் என்பதுதான் அரசியலும் போராட்டமும்.
ஆயுதப்போராட்ட முயற்சி வலிகளோடு தோற்றுப்போய்விட்டது. அதன் அர்த்தம் நிலம் அழிந்து போனதல்ல. எமது நிலம் நிரந்தரமானது. போலி உரிமைப்பத்திரங்களால் நிலத்தின் உரிமத்தையும் அதன் அரசியலையும் நீண்டகாலத்திற்கு மாற்றிவிட முடியாது.
மா.குருபரன்
18-05-2015
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க