நன்றி: கூகிள் ஆண்டவர் |
ஒருதலைக் காதல்
சொல்லப்படாத ஏதோவொரு இடைவெளியில்
கசிந்து வழியும் காதலை
அள்ளிப் பருகியபடி
இரவுகளைத் தொலைத்துவிடும்
அன்பு!
கனவுகளை
மொழிபெயர்க்கத் தெரியாத
குழந்தையாய்
என்னென்னமோ உளறிக் கொண்டிருக்கிறது
உன் பற்றிய காதல்
27-05-2015
27-05-2015
மழை ஓய்ந்த மாலைப் பொழுது
மழையின் முத்தத்தால்
வெட்கிக் குனிந்து நிற்கும் மொட்டுகளில்
எஞ்சிக் கிடக்கிறது காதலின் துளி
04-08-2015
மழையின் முத்தத்தால்
வெட்கிக் குனிந்து நிற்கும் மொட்டுகளில்
எஞ்சிக் கிடக்கிறது காதலின் துளி
04-08-2015
மா.குருபரன்
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க