Friday, July 29, 2016

"இனவாதம்" இன்றைய உலக அரசியல் ஒழுங்கு

3 கருத்துக்கள்
உலக அரசியலின் ஒழுங்கை புலிகள் பின்பற்றத் தவறினார்கள் என புலிகள் மீது குற்றம் சாட்டும் அரசியல் மேதைகள், இன்றைய உலக அரசியல் ஒழுங்கை தமிழர்கள் இடத்தில் வெளிப்படையாக பேசுவதற்கு தயங்குவதற்கான காரணம் தெரியவில்லை.

உலக அரசியல் ஒழுங்கானது வல்லரசுகளான அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து ஆரம்பிக்கபட்டு ஐரோப்பிய நாடுகளினூடாக வழிநடத்தப்படுகிறது.

மூன்றாம் உலக நாடுகளின் இனவாத அரசியலானது சில்லறைத்தனமாக பேசப்பட்டாலும், வளர்ச்சியடைந்த நாடுகளின் இனவாதப் போக்கானது அரசியல் கலாச்சாரமாக உருவெடுக்கிறது. வல்லரசுகளின் அரசியல் கலாச்சாரத்திற்கு சமாந்தமாரக நகர்த்தப்படும் போராட்ட அரசியல்கள் இலகுவில் வெற்றியடைவது சாத்தியமான ஒன்று என்பது 21ம் நூற்றாண்டு படிப்பினை.

என்றுமில்லாத அளவிற்கு இன்று இனவாத அரசியல் மேற்குலக மற்றும் மத்தியகிழக்கு அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது..

பின்வரும் சம்பவங்களை பாருங்கள்:


1. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியமை:

உலக சட்டவியல்கள் பலவற்றின் ஆரம்பப் காணப்படும் பிரித்தானியா, தன்னை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுவித்துக் கொண்ட்டிருக்கிறது. அல்லது மக்களால் விடுவிக்கபட்டிருக்கிறது. "பிரித்தானியர்களின் இருப்பிற்கு பிற ஐரோப்பிய நாடுகளால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது" என்ற அச்சம் பிரித்தானிய மக்களிடத்தில் மேலோங்கி இருக்கிறது. "இணைந்து வாழுதல் சுய இருப்பிற்கு அச்சுறுத்தல்" என்ற எண்ணக்கரு மேலோங்கியிருக்கிறது. அதன் விளைவாக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.2. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்:
உலக வல்லரசான அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களிற்கு இருக்கும் ஆதரவு குறித்து ஆராய்வது இன்றைய காலகட்ட அரசியல் தன்மையை புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும் அடுத்த உதாரணம். ஹிலாரி கிளின்ட்டனுடன் எதிர்த்தரப்பில் போட்டியியும் றம்ட் டொனாட்டிற்கு சரிக்கு சமனான ஆதரவு மக்களிடத்தில் காணப்படுகிறது.

இங்கு கவனிக்க வேண்டியது றம்ட் இன் உரைகள். தான் அமெரிக்க ஜனாதிபதி ஆகியவுடன் பதினொரு மில்லியன்  முஸ்லீம் மற்றும் இதர குடியேற்றவாசிகளை நாட்டிலிருந்து அப்புறப்படுத்தவுள்ளதாகவும் இணைந்து வாழுதல் அமெரிக்கர்களின் எதிர்கால இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவும் சொல்கிறார். இந்த இனவாத கொள்கையை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைத் தாண்டி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலையே இனவாதம் ஒரு அரசியல் என்ற நிலை காணப்படுகிறது என்பதை நாம் சாதகமாக அணுக வேண்டும்.

3. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிலைப்பாடு:

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் என்றுமில்லாதவாறு "எம் இனம்,எம் அடையாளம்,எம் இருப்பு" என்ற எண்ணம் பரவலாக வளர்ந்து வருகிறது. பிரான்ஸ்,ஜேர்மன் போன்ற நாடுகளில் இனவாத அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அதிகரித்கொண்டே இருக்கிறது.


தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்!!

உலக அரசியலின் இன்றைய நிலைப்பாடு முற்று முழுதாக "சுய அடையாளங்களையும் இருப்பபையும் தக்கவைத்துக் கொள்ளல் மற்றும் பாதுகாத்தல்" என்ற வரையறைக்குள் நவீன இனவாத அரசியலாக பரவலாக்கபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த அரசியல் போக்கை சாதகமாக பயன்படுத்தி எமக்கான இருப்பையும் சுய அடையாளங்களை பாதுகாப்பதற்கான பொறி முறையையும் உருவாக்க வேண்டும்.

தெற்காசிய வியாபாரச் சந்தையை கையப்படுத்துவதற்காக மேற்குலகால் திணிக்கப்பட்ட "இணக்க அரசியலில்" இருந்து வெளியாகிய சுய இருப்பை உறுதிப்படுத்தும் அரசியலை வீரியமாக செய்ய வேண்டும்.

சுய இருப்பை உறுதி செய்வதற்கான அரசியல் என்பது வன்முறை அல்ல என்பதை மேற்குலக நடைமுறைகள் மூலம் புரிந்து கொண்டு அதை மக்களிடத்தில் கொண்டு சென்று மக்களை தயார்ப்படுத்த வேண்டும்.


உலக ஒழுங்கை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்!!!


மா.குருபரன்
29-07-2016

3 கருத்துக்கள்:

 • This comment has been removed by a blog administrator.
 • January 10, 2017 at 5:09 AM
  Anonymous :

  Who told you that the world order is determined by USA and the GB and directed via EU?

  Who told you that the current global phenomena is based on far-right political ideology?

  You know the primary reason for brexit?

  Have you actually studied political science or international relations in a world reputed University or you just passed out from Jaffna University? what a shame on you and our community?

  As you said earlier, now there are no regulations, ethics in writing, whoever wants, create a website and start disseminating improper ideologies.

 • January 10, 2017 at 10:43 PM

  ஹலோ Anonymous, தமிழ் கட்டுரைக்கு ஆங்கிலத்தில கமன்ட் பண்ணி பெருமைப்படுற நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியும்.
  உங்கள் அடையாளத்தோடு எந்த மொழியில் கமன்ட் பண்ணினாலும் அதற்கான பதிலை தரமுடியும். மற்றப்படி திரைக்குப் பின்னால் இருக்கும் அட்டைக்கத்திகளுக்கு நேரத்தை செலவிட முடியாது.

  போய்வரவும்.

  நன்றி

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க