பனிப்பூக்களை ரசித்த - அந்த
பாடசாலை பருவம்
ஞாபகம் இருக்கிறதா?
மௌனமாய்
விடை பெறும் - அந்த
மாலைப் பொழுதுகள்
ஞாபகம் இருக்கிறதா?
அப்போதெல்லாம்
உன் விழிப்பார்வைக்காய்
ஏங்கியிருக்கும் - இந்த
ஜீவனை அறிந்தவள்
நீயல்லவா! - நீ
எங்கே இருக்கிறாய்
இப்போது!
நாம்
காதலர் என்று சொல்லி
கூடியிருந்தவரெல்லாம்
நக்கலடிக்க - முகம்
நாணிச் செல்வாயே
அதன் அர்த்தம் தான் என்ன?
இது..
பதினாறுகளின்
பகிடியென்றெண்ணினாயோ!
தூற்றல்களில்
தொடங்கிய முதல் காதல்
இதயத்தின்
ஓர் மூலையில்
துருக்களாய் தொங்கும்
தெரியுமா உனக்கு?
வலியின்
உச்சத்தில்
ஆண்டுகள் பல கடந்தும் - உன்
நிழல்..
என்னில் படுவதாய்
பிரம்மை.....
நீ...
பிரிந்து சென்றவள் தான்
ஏன் - உன்
நினைவுகளை
என்னிடம்
வைப்புச் செய்தாய்?.......
நீ...
எங்கே
இருக்கிறாய்
இப்போது?...
- மா.குருபரன் -
பாடசாலை பருவம்
ஞாபகம் இருக்கிறதா?
மௌனமாய்
விடை பெறும் - அந்த
மாலைப் பொழுதுகள்
ஞாபகம் இருக்கிறதா?
அப்போதெல்லாம்
உன் விழிப்பார்வைக்காய்
ஏங்கியிருக்கும் - இந்த
ஜீவனை அறிந்தவள்
நீயல்லவா! - நீ
எங்கே இருக்கிறாய்
இப்போது!
நாம்
காதலர் என்று சொல்லி
கூடியிருந்தவரெல்லாம்
நக்கலடிக்க - முகம்
நாணிச் செல்வாயே
அதன் அர்த்தம் தான் என்ன?
இது..
பதினாறுகளின்
பகிடியென்றெண்ணினாயோ!
தூற்றல்களில்
தொடங்கிய முதல் காதல்
இதயத்தின்
ஓர் மூலையில்
துருக்களாய் தொங்கும்
தெரியுமா உனக்கு?
வலியின்
உச்சத்தில்
ஆண்டுகள் பல கடந்தும் - உன்
நிழல்..
என்னில் படுவதாய்
பிரம்மை.....
நீ...
பிரிந்து சென்றவள் தான்
ஏன் - உன்
நினைவுகளை
என்னிடம்
வைப்புச் செய்தாய்?.......
நீ...
எங்கே
இருக்கிறாய்
இப்போது?...
- மா.குருபரன் -
மிக அழகான கவிதை நண்பா...
நன்றி மச்சான்