Thursday, July 23, 2009

என் கல்லூரி....

0 கருத்துக்கள்



எம் குறும்புகளை
சேகரித்த
கோயிலிது...
குற்றுயிராய்
கிடந்த போதும்
தன் மடியினில் தாலாட்டி -எமை
மனிதர்களாக்கிய
தாயிவிள்...
சன்னங்களால்
சிங்களம்
சல்லடை போட்ட பின்னும்
சளைக்காமல்
நிமிர்ந்து நிற்கும்
இது தான்
என் பள்ளி....
எஞ்சிய மிச்சங்களின்
நிழலில்
குந்தியிருந்து கற்றுத்தான்
நிமிர்ந்தெழுந்தெழுகின்றன
இந்த சிறுசுகள்...
ஆழமாய்
இடிந்த பின்னும்
தடைகளை உடைக்க
உயிருடை போர்த்தியது
இந்தப்பள்ளி.....
இந்த சுவர்களில்
காதை வைத்து
கேட்டுப்பாருங்கள்..
வானரக்கர்களின்
கொடூரத் தாக்குதலால்
அலறிய சிறுசுகளின்
குரல்கள்
இப்போதும் ஒலித்துக்
கொண்டிருக்கும்...
தன் உடலில்
குண்டுகளைச் சுமந்து
விழி மூடியழுத
குழந்தைகளை
விழிப்போடு காப்பாற்றியதும்
இந்த அன்னைதான்...
மீண்டும் ஒரு தடவை
உன்மடியில் உறங்க வேண்டும்
பள்ளிச் சிறுவனாய்.....


எம் எத்தனை
குறும்புகளை தாங்கியிருப்பாய்..
நாம் கள்ளமடித்த
வகுப்பிற்கெல்லாம்
மறைப்பு கொடுத்ததும்
நீதானே...
குதித்து விளையாடுவதற்காய்
உன் தோள்களில்
எத்தனை தடவை
நான் ஏறியிருப்பேன்....
தலைதடவி
ஓடி ஆட விட்டு
அழகு பார்த்தவளே...
உன் பிள்ளையாய்
மீண்டும் உன் மடியில்
உறங்க வேண்டும் நான்...


15.12.2008
மா.குருபரன்




0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க