Thursday, July 23, 2009

எப்போது மாறும்!!!!!

0 கருத்துக்கள்
ஜனநாயகம்
சாகடிக்கப்பட்டு
யதார்த்தம் தூக்கிலிடப்படுகிறது...
பொய்களின் சீளில்
உண்மைகள் இன்னும்
ஊமைக் காயங்களாய்…………
சர்வாதிகாரம்
சட்டத்தின் துருக்களாய்……..
எங்கே தொலைந்து போனது
எழுதப்பட்ட வரலாறுகள்?
வானம் கிழிந்துதான்
நிலவு தொங்குகிறது
என்கிறது செய்தி!
எப்படி அழுவது
கண்ணீரில் கூட
இரத்த வாடை…
வலிகளின் மிச்சத்தில்
விழிகள்
வழிகளை பார்த்திருக்கின்றன….
விடிவு வரும்
என்ற நம்பிக்கையில்…..

மா.குருபரன்


0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க