Friday, July 24, 2009

வலி......

0 கருத்துக்கள்



"விடை தெரியாமல்
பல வினாக்கள்
கல்லறைகளாகி விடுகின்றன....
அதை விதியென்பதா
அல்லது
மதியில்லையென்பதா????
கருவிலேயே கலைக்கப்பட்ட
ஒரு
மென்மை காதலென்பதா????
இது..
சுகமான வலியென்றாலும்
சுமையாக கனக்கவேயில்லை - அது
நீயென்பதால்....
பொழுதுகள் அழிந்து விட்டன..
ஆனால்...
நினைவுகள் மட்டும்
இதயத்தின் ஓர் மூலையில்
துருக்களாய்
தொங்கிக் கொண்டு......"

6.12.2008
மா.குருபரன்


0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க