Friday, July 24, 2009

இன்னொரு கிரகம்...........

0 கருத்துக்கள்



காற்றில்லா வெளியில்
நான்கு சுவர்களுக்கிடையில்
நான் மட்டும் தனிமையில்......
நான் சுவாசிப்பது
சுவரில் பட்டுத் தெறிக்கும்
என் மூச்சைத்தான்........
ஏதோ கனப்பில்
என்னை எரித்துக் கொண்டு
வெண் சுருட்டுக்கள்.....
காற்றுத் தூசியிலும்
ஈரமில்லை...
எப்படி அணைந்து போகும்
இந்த தனிமை.....
இது இன்னோர் கிரகம்..
மரமிருக்கு பூவில்லை...
கூடுகளிருக்கு குருவியில்லை......
இலைகளிருக்கு காற்றில்லை.....
மனிதங்கள்
பிணமாய் அலையும்
நான் வாழும்
இந்த மொறட்டுவை
இன்னோர் கிரகம்........

10-12-2008
மா.குருபரன்



0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க