Friday, July 24, 2009

துயரம்...

0 கருத்துக்கள்


எமக்கு மட்டும்
ஏன் இந்த வலி!!!!!!!!!
எமை ஏதிலிகளாக்கி
எம் பிணங்களை
பொதிகளாக்கி
சிங்களம்
இன்னும் எத்தனை
நாட்களுக்கு தின்னும்???
மஞ்சவண்ணா மரக்கொப்பில்
பூத்த புது மலரொன்று
புழுதியில்
தூங்குகிறது பார்த்தாயா???
கோடிஸ்வரராய்
வாழ்ந்த எம்மை
கோடியில் தூங்க விட்டது யார்????
எமக்கு நாடில்லை என்று
மேடை போட்டு சொன்ன சிங்களமே
தூரத்தில் இருந்து
வேடிக்கை பார்
தமிழர் காட்டப்போவது
நாடகமல்ல
சரித்திரமொன்று....

13.12.008
மா.குருபரன்



0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க