Friday, July 24, 2009

ஏக்கம்..

0 கருத்துக்கள்


மீண்டும்
ஒரு இரவு
மௌனமாய் நீண்டது,
முகிலுக்குள்
ஓடி விளையாடிய
நிலாவும்
நீண்ட வெளியில்
ஏதோ ஒர் யோசனையில்,
சளியின் உச்சத்தால்
உஸ்ணம் கூடி
விழியருகில்
கண்ணீரோடு
மெய் சோர்ந்து
கொண்டது,
தலை வைக்க
தாயணையை - என்
கரங்கள் தேடியது
கூடுகள் சிதைக்கப்பட்டு
சின்னா பின்னமாக்கப்பட்ட
சிங்கள தேசத்தில்
வாழ்பவன் என்று
தெரியாமல்!

- மா.குருபரன் -



0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க