உன் வரிகளில்
உன் முத்தை தேடினேன்
கிடைத்த பரிசு தான்
புரிதல் பற்றியது.....
என்ன செய்வது!!!!!
திட்டலாய் வரும் - உன்
வரிகளும்
எனை
தட்டிச் சீண்டும் - உன்
கைகளென்றல்லவா
தேற்றியிருந்தேன்.....
வேடிக்கையாய்
விளையாடினாயோ என்னோடு..
தேடிப் பார்க்கிறேன்
உண்மையாக கூட இருக்கலாம்.....
பொக்கிசப் படுத்தியிருந்தால்
நேற்றுகளில்
உன் வரிகளை தேடிப் பார்..
காற்றை விட
புதுமையடி நீ.....
மா.குருபரன்
20.01.2009
9.30 pm
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க