Thursday, July 23, 2009

கண்ணீர் எமக்கு மட்டுமா????

0 கருத்துக்கள்


மலர்வதற்காய் கருக்கட்டிய மொட்டுகளும்
மரங்கள் தறிக்கப்பட்டு
விரியாமலே
வீதியில் விழுகின்றன என் தேசத்தில்....
என்ன பாவம் செய்தன
அந்தப் பூக்கள்...
கந்தக காற்றை
சுவாசித்து பழகியதால் தானோ
பொஸ்பரஸ் போட்டு
எரித்து தள்ளுகின்றனர்?????
இன்னும்
"அம்மா" என்பதை விட
வேறு மொழி தெரியாத
பிஞ்சொன்றின்
இரு விழிகளையும்
பறித்த
மனிதர்களே..
பசித்தால்
தாய் முலையை
பிஞ்சு
எப்படி தேடும்???..
ஊரையிழந்து
கண்ணீர் வற்றிப் போன
இனத்திடம்
பிஞ்சுகளின்
ரத்தத்தை கேட்பது
ஞாயமா???
உலகம் பார்க்காத
குழந்தைக்கு
உயிர் கொடுத்து
என்ன பயன்????
தயவு செய்து
கொண்றுவிடுங்கள் மனிதர்களே!!!!!
கோடி கோடியாய்
வாழ்ந்த என்னினத்தை
கோடிக் கொண்டுவந்தது
மட்டுமல்ல
அரையுடுப்பு கொடுத்து
பாதி ரொட்டிக்கு
வரிசையில் விடப்பட்டிருக்கிறது
பார்த்தீர்களா?????
உண்மையில்
மனிதாபிமானம்
வென்றுதான் விட்டது.....

கலியுக கடவுள்களே!!!
உங்கள்
முன் தானே
எம் குழந்தைகள் பிணமாய் விழுகின்றனர்...
தீ மிதித்தோம்
அந்தரத்தில் தொங்கி காவடியெடத்தோம்
தீச்சட்டி சுமந்து
எம் அம்மாக்கள்
எத்தனை தடவை - உனை
சுற்றி வந்திருப்பர்...
நீங்கள் உண்மையில் கல் மட்டும் தானா???
கடவுளே - நீ
உள்ளாயென்றால்...
கண்ணீர் எமக்கு மட்டமா?????


மனிதர்களே..
உங்களில் மனிதம் இருந்தால்
எம் குழந்தைகளை கொன்று விடுங்கள்
கூறு போடாதீர்கள்...
நாங்கள்
மீண்டும் ஒரு தடவை
அங்கே
பிறக்க மாட்டோம்....



மா.குருபரன்
14 - 02 - 2009


0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க