Monday, August 3, 2009

என் சொர்க்கம்

0 கருத்துக்கள்




எள்ளுக்காட்டு வயலும்
கூழாவடிச் சந்தியும்
தலைகுத்தி வாய்க்காலும்
உருத்திரபுர
விளையாட்டு மைதான மதவும்..
பொறிக்கடவை அம்மன் கோயில்
அன்னதானமும்...
உராய்வுற்ற சில்லு வண்டில் சத்தமும்
பொம்பிள பிள்ளைகளுக்கு
சையிற்றடிக்கும்
ஜாலியான மாலைப் பொழுதுகளும்
ம்.... இன்னமும் எத்தனையோ...
சுற்றிவர சொந்தங்கள்
"கூ.." என்று கத்தினாலே
கூடிவரும் ஊர்....
எல்லாமே இழந்து போய்
நினைவுகளில்
நித்திரை செத்தபடி.....
நிஜங்களை
மறுதலிக்க முடியாமல்
மாண்டு போய் கிடக்கிறது
மனம்.

மா.குருபரன்
3-8-09


0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க