உக்கிப்போய்
பியந்து தொங்கும்
கிடுகு கூரைகளின்
வீடுகளைச் சுற்றிலும்
சப்பாத்து கால்களின் ஆழம்...
மண்மேடாய் மண்டிக்கிடக்கிறது
சுவர்கள்....
மண்ணை கிண்டி
அன்பை அஸ்திவாரமாய் போட்டு
காட்டு வெயிலிலும்
வயற் காற்றிலும்
தின்றுபோட்டுறங்கிய
மான்புமிகு மனித இனம்
அழிக்கப்பட்டதற்கு
பார் கூறிய நியாயம் "மனிதாபிமானம்"........
ஆள் கூறே இல்லாத அச்சில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
வீசப்பட்டு கிடப்பதும்....
அரை ராத்தல் பாணுக்கு
நாள் முழுவதும்
வயிறு வற்றிகிடப்பதும்...
உலக மனிதாபிமான சாசனத்தில்
கட்டாயமாக்கப்பட்ட விதிமுறைகளோ!!!!!!
மா.குருபரன்
12-09-09
அருமையான கவிதை குரு.பலரை சென்றடையும் விதமாக தொகுப்பு தளங்களில் இணைக்கலாமே.அறை,விரிவுரை,பரீட்சை,நூலகம் என்று பல்கலையில் இருந்தவர்கள் முன்பு கிடைத்திராத பிரபலத்துக்காக எழுதும் அலப்பரைகளைவிட வாழ்க்கையில் அடிபட்ட உங்கள் போன்றாவர்கள் எழுதுபவை அர்த்தங்கள் அதிகம் பொதிந்திருக்கவல்லன.
உங்களுடைய கருத்தூட்டலுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..