போதைக்கு வெறித்தனமாய் அடிமையானவர்கள் எப்படியிருப்பார்கள்???? அவர்களுடைய உலகம் எப்படியிருக்கும்???? என பலபேருக்கு இருக்கும் அதே சந்தேகம் தான் எனக்கும் இருந்தது. இதுவரை இருந்த சந்தேகத்திற்கு சின்னதாய் தன்னும் விடை கண்டுபிடித்துவிட்டேன் அதனால்தான் இப்படியான ஒரு பதிவு எனக்கு அவசியப்பட்து.
நீண்டு கொண்டே இருக்கும் என் பயணத்தில் எத்ததையோ மனிதர்கள்.. விசித்திரமான வாழ்கைமுறை... தடுமாறச்செய்யும் குணவியல்புகள்.... இப்படியான இந்த பாதையில்தான் ஒருவனைச் சந்தித்தேன். ஏறத்தாள 2 மாத கால பழக்கம். 21 வயதிருக்கும்.... போதைக்கு வெறித்தனமாய் அடிமையாகிக் கொண்டிருக்கும்(முக்கால் வாசி ஆகிவிட்டான்) ஒரு வாலிபன்.தன்னுடைய 17வது வயதில் போதைப்பொருள் பாவனை ஆரம்பித்ததாக கூறுவான். இந்த போதைகளினால் எப்படி எப்படியான உணர்வுகள் தோன்றுகின்றன... அதன் நியாயப்பாடுகள் சம்மந்தமான என் கிறுக்குத்தனமா கேள்விகளுக்கு போதையின் உச்சத்திலும் தெளிவாக பதில் சொல்லும் ஒரு வாலிபனின் வாழ்வியல் சொல்லும் சில செய்திகளை நான் இங்கே பதிக்கிறேன்...
ஊரில் கள்ளு தவறணையில் குடித்துவிட்டு ரோட்டில் பிலிம் காட்டுபவர்கள் தொடக்கம் கம்பஸில் தண்ணியடித்துவிட்டு பிலிம் காட்டுபவர்கள் வரை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இவனின் போதைத் தத்துவம் நிட்சயமாக அவன் போதையை எந்த அளவு காதலிக்கிறான் என்பதையே எனக்கு காட்டிற்று. சாதாரணமாக நான் கண்ணால் கண்ட போதைப்பொருட்கள் கள்ளு(இது போதைப்பொளா தெரியவில்லை) சாராயம் சிகரட்....
ஆனால் இவன் வித்தியாசமான ஏதோ ஒன்றும் பாவித்து கொள்வான்..... அதனை புகைப்பதற்கு ஏற்றவாறு வடிவமைத்து கொள்ளும் முறை அவனுக்கே உரிய தனிக் கலை என எண்ணிய நாட்களும் உண்டு.(இணையதளங்களில் தேடி வேறு பழகிக்கொள்வான்) .
இதனை புகைத்தபின் அவன் எப்போதுமே ஒரு வகையான இரைச்சலான இசையையே கேட்கவிரும்புகிறான். மெல்லிசைகள் அவனுக்கு எரிச்சலை ஊட்டுகின்றன. கேட்கும் பாட்டினோ இசையினோ காட்சிகள்(visual) எப்போதும் கிறுக்கல்கள் போலானதோ அல்லது மனிதமற்ற வித்தியாசமான பேய் போன்ற உருவங்கள் போன்றானதாகவோ இருக்கும். ஒருவேளை மனித உருவங்களாயிருந்தால் அவற்றின் இயல்லபான நிறங்கள் மாற்றப்பட்டு கண்ணைச் சுற்றி கருப்பு வளையங்கள் இடப்பட்டு உட்பகுதி சிவப்பு நிறத்தாலோ அல்லது வேறு பிரகாசமான நிறத்தாலோ மையிடப்பட்டு மாற்றப்பட்டிருக்கும்.
அவன் கேட்கும் அந்த ஆங்கிலப்பாடல்கள் பொதுவாக " இந்த பூமியினிலே நான் தான் சந்தோசமாய் இருக்கிறேன்" என்பது போன்றான கருத்தை கொண்டிருக்கும்.
இன்னொருவிடயம் இருளைத்தான் அதிகம் விரும்பிக்கொள்கிறான். இப்படி நான் கூறும் போது நீங்கள் வித்தியாசமாக நினைக்கின்றீர்கள் என்பது விளங்குகிறது. ஆனால் போதையில் அவனுடைய உலகம் இதுதான்.
ஆனாலும் சாதாரண நேரங்களிலும் அவன் இரைச்சலான இசைகளையே விரும்புகிறான்.
இப்படித்தான் ஒரு நாள் அவன் பூமியிலிருந்து பல அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தான்... அப்போது என்னுள் இருந்த பல கேள்விகளை அவிழ்த்தேன்.....
அவன் அடக்கடி ஒரு வித்தியாசமான பாடல் கேட்பான்.. அதன் காட்சிகள்.. கண்கள் கருப்பு வளையங்களால் சுற்றி கீறப்பட்டு உடம்பெல்லாம் பச்சை குத்தப்பட்டு நெஞ்சுப்பகுதியில் பிளேட்டுகளால் சாதுவாக கீறி இரத்தம் வழிவது போன்றானதாக இருக்கும்.
அப்போது நான் கேட்டேன் "இதிலே என்னடா ரசிக்க கூடியவாறு இருக்கிறது என்று" அவனது பதில் மிக தெளிவாகவே இருந்தது "இந்த பாடலை ஒருவன் ரசித்து தானே உருவாக்கியுள்ளான் அதே ரசனை எனக்குமுள்ளது..... நீங்கள் பார்க்கும் தமிழ் பாடல்களில் ரசிப்பதற்கு என்னதான் இருக்கிறது" என்றான்.
இதில் என்னென்றால் அவன் கேட்கும் பாடல்களில் ஏதாவது 2 அல்லது 3 வசனங்கள் தான் இருக்கும். அந்த வசனங்கள் தான் பாடல் முளுவதும் திரும்ப திரும்ப வரும்.
அவை "எனக்கான உலகில் நான் சந்தோசமாக இருக்கிறேன்" "சாத்தானுடையது தான் உலகு", "நான் இந்த உலகை பற்றி கணக்கிலெடுக்க மாட்டேன்" அல்லது மனிதத்தை கெட்டவார்த்தையால் திட்டுவது போன்றானதாக இருக்கும்.
(மாதிரி பாடல் ஒன்று இங்கு இணைக்கப்பட்டுள்ளது.... மனத்திடகாத்திரம் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்... ஆபாசமானது கூட.. பார்க்க விரும்பின் இங்கே சொடுக்குங்கள்)
இவற்றிற்கு அவன் கூறும் நியாயம் என்னவென்றால்..."எப்போதுமே எமக்கு துன்பம் அல்லது கஸ்டம் தான் வருகிறது எனவே நாங்கள் கேட்பவை பார்ப்பவை எதிர்மாறானதாக இருக்கவேண்டும் அப்படியென்றால்தான் மனம் சந்தோசமாய் இருக்கும்.. என்னைப்போல்" என்றான். நிட்சயமாவே திருப்பி ஒன்றும் சொல்லமுடியாத அளவிற்கு தடுமாறித்தான் போனேன்.
வித்தியாசமானதாக அமைந்திருக்கும் அந்த பாடல் காட்சிகளில் வருவதைப்போன்று போதையில் தானும் செய்து பார்க்கும் பழக்கம் உண்டு. தானும் உடம்பினில் மண்டையோடு, பாம்பு, மட்டத்தேள் போன்ற உருவங்களை பச்சை குத்தியுள்ளான்.இரவினில் தன் கண்ணைச் சுற்றி கருப்புவளையங்கள் இட்டு கொள்வான். எதுபற்றியதான ஆசையை மனம் எதிர் பார்கிறதோ அதை செய்துவிட வேண்டும் அது தான் உண்மையான சந்தோசம் என்பது அவனின் கொள்கை.
இத்தனைக்கும் அவனையும் காதல் தன் வயப்படுத்தி ஒருபக்கத்தால் அழைத்து செல்கிறது...
போதையும் தன் வழியில் அழைத்து செல்கிறது....ஆனால் காதல் தரும் வலியையும் போதை தான் ஆற்றுகிறது என்பது அவனின் வாதம்....
மா.குருபரன்
18-09-09
நன்றாக இருக்கிது.எப்போதும் ஆண்கள் போதையை நியாயப்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். குருபரன் அந்த பையன் 21 வயது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அவரை எங்காவது சீர்திருத்த பள்ளிகளில் இணைக்க ஏற்பாடுகள் செய்யலாமே????
வருகைக்கு நன்றி நண்பரே...
ம்... எந்தவொரு செயலுக்கும் அவரவர் நியாயங்கள் வைத்திருக்கிறார்கள். Ha Ha Ha Ha... என்ன திருத்திறதா????? அம்மாடியோவ்... வேணாமுங்க... திருந்திறவன் தானாக திருந்த வேண்டும்...