எப்போதும் போல
மங்கிய மாலை…
முகில்களின் குமைச்சலில்
தொங்கிக்கிடக்கிறது நிலவு….
மலை முகடுகளில்
பனியின் ஆக்கிரமிப்பு
கூடிக்கொண்டே வருகிறது…..
காற்றிற்கும் பூக்களிற்குமான
காதலின்
குளிர் நிலவு நெருக்கத்தை
அதன் தலையசைப்பு
உறுதிப்படுத்துகிறது……
இன்னமும்
இயற்கை குலையவில்லை – அதன்
இளமையும் கலையவில்லை…
மனிதம் மட்டும்
தொலைந்து போனது…
வாழ்வியல் கற்களின்
சலசலப்பும் குறைந்த பாடில்லை….
இருப்பிற்கான எல்லை
இன்னமும் தெரியவே இல்லை...
கால்கள் கடுக்க
பயணங்கள் தொடர்கிறது…….
மா.குருபரன்
25-09-09
Share on Facebook
Kadavan: Varappil vettuvathu
Kadavai: Veliyal kadakka uruvakkuvathu