காதல் சாம்ராஜ்ஜியத்தில்
கனவுகளுக்கேது பஞ்சம்…
இறந்த கால எச்சங்கள்
சுற்றிலுமுள்ள
முட்களில்
பிய்ந்து தொங்கினால் எனக்கென்ன
தூரத்தில் இருந்து
பூவை ரசிக்க – என்
கண்ணும் மனமும் போதும்….
அதன் மென்மையை
தொட்டுணர கனவுகள் போதும்…
என்னமோ…
கனவுகளுக்காகவே
சற்று நேரத்திற்கே தூங்கிவிடுகிறேன்….
மழை பெய்தோந்த நாள்
சாலையோர விடுதி
மெல்லி மெழுகுதிரி வெளிச்சத்தில்….
இளம் சூட்டு தேநீருடன் நாம்…
காதல்
கண்களில் புதைந்துவிட
அரவணைக்கும் அன்பை - அவள்
புன்னகை சொன்னது……
தூவானம் தெறிக்கும்
சில்லென்ற காற்று….
என்னருகில்
நீ இருக்கும் போது மட்டுமே
இந்த பூமி
வசந்தம் கொண்டாடுகிறது என்றபடி
அவள் உள்ளங்கையை
இறுக்கி
அணைக்க நினைக்கும் போது
அவள் என் கைகளை
அணைத்து கொள்வாள்….
அப்போது
விடிந்து விட்டதை
அலாரம் உறுதிப்படுத்தும்…
மீண்டும் இரவு….
இன்னுமொரு வசந்த கால காட்சி…
காதல் சாம்ராஜ்ஜியத்தில்
கனவுகளுக்கேது பஞ்சம்….
நினைவுகளும் இரவுகளும்
போதும்
காதலை
கனவுகள் வாழவைக்கும்….
மா.குருபரன்
14-09-09
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க