23-09-09 மாலை 3.45 "உன்னைப்போல் ஒருவன்" படம் பார்க்க மலேசியா பூச்சொங்கில் உள்ள "யஸ்கோ"விற்கு நானும் எனது நண்பரும் சென்றிருந்தோம். அவன் படத்தைப்பற்றி எதுவுமே அறிந்திருக்கவில்லை. கமலின் படம் என்றவுடன் உதட்டு முத்தங்கள் சின்னசின்ன சில்மிசங்கள் நிறைந்த ஒர் கனவுலக படமாகதான் இருக்குமென்பது அவனுடைய கற்பனை..... தியேட்டருக்குள் போக முன் அவருடைய உரையாடலில் இருந்து அவனுடைய படம் பற்றிய எதிர்பார்ப்பை புரிந்து கொண்டேன்...இருந்தும் நான் படம் பற்றி அவனிடம் எதுவுமே கூறவில்லை...ரிக்கட் எடுக்கும் இடத்தில் "கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது" என்று வேறு எழுதியிருந்தது. அம்மாமாடீடீடீடீ.. நம்ம கமல் சார் இந்தப்படம் வேற நடிச்சிட்டாரா என்றவாறு கிழுகிழுப்புடன் சிங்கம் சிங்கிளான சீற்றொண்டை வேண்டிக்கொண்டு உள்ளே நுளைந்து விட்டார். நானும்.... சரி... படம் முடிய வெளில வாடி... அப்ப பாப்பம் என்று உள்ளே சென்று அமர்ந்து கொண்டென்....
படம் முடிய நான் வெளியால் வருகிறேன் நண்பர் வாசலில் நின்ற படி "கொய்யால.... கமலுக்கு என்ன லூசாடா... ரெயிலர போட்டிற்று படம் எண்டு வித்திருக்கிறான்.... அதுக்கு கண்டிப்பாக 18 வயசுக்கு மேல எண்டு வேற றோட்டீஸ்.....நீ இத முதலே சொல்லியிருக்கலாம் தானே" என்று என்னென்னமோ நிறை நல்ல வசனங்களால் திட்டிக் கொண்டிருந்தான்.....
சரி...கூல்..."வா கீழபோய் எதாவது ஸ் பெசலா குடிச்சிற்று போவம்"... என்று அவனையும் அழைத்து கொண்டு ஒரு சைனீஸ் ரெஸ்ரோரண்டிற்கு சென்றேன்..
சைனீஸ் காரனுகளின்ர சாப்பாடுகளுக்கு பெயர்களும் தெரியாது... ஏதாவது மாறிச்சாறி சொல்லிவிட்டால் பூரான் பிரட்டல்..கரப்பொத்தான் சம்பல்..தவளை சூப்.. என்று ஏதாவது பாம்பு பூச்சிகளின் சாப்பாடுகளை கொண்டு வந்திருவானுகள் என்று "மெனு"வ வாங்கி பார்த்தோம். தேடியதில் கொஞ்சம் நிம்மதியான பெயராக "Honey Milk" அப்பிடி ஒன்று இருந்தது. அவனும் சொன்னான் சரி இதை ஓடர் பண்ணுவம் எண்று சொல்லி "Honey Milk Hot" 2 ஓடர் பண்ணிவிட்டு காத்துக் கொண்டிருந்தோம். இரண்டு பெரிய (cup) சட்டில Honey Milk வந்தது... அம்மாடியோவ்.... இதை எப்பிடிடா இதில குடிக்கிறது????? என்ற ஏக்கத்தை எங்கள் பார்வை பரிமாற்றத்தோடையே நிறுத்திக் கொண்டோம்... ஏனென்றால் எம்மை சுற்றிலும் தோல் வெள்ளை நிறமான பெண்கள் அமர்ந்திருந்தார்கள். குடிக்கும் முறை தெரியாமல் பெண்கள் முன் திண்டாடுவதா......?????? ஏதொவெல்லாம் செய்தது....
சுற்றிலும் யாராவது இந்த Honey Milk குடித்தால் அவர்களை பார்த்துச்சரி ஏதாவது பண்ணிக் கொள்ளலாம் என்று நினைத்தால்.... "ச்சே.. இப்பிடி சுற்றிப் பார்த்தால் நம்மள விசயம் தெரியாதவர்கள் என்று நினைத்து விடுவார்களோ" என்று வாலிபம் தாள்வு மனைப்பாண்மையை உருவாக்கியது......இனி என்ன செய்யிறது... படம் பார்க்க போய்த்தான் நோண்டியாகிற்றமில்ல... சனியன் துலைஞ்சுது எண்டு இங்க வந்தா மூதேவி Honey Milk கோப்பைக்குள்ள ஏறி இருக்குதெண்டு தலையை சொறிந்த படி.... ஏதோ பெரிய இவனுகள் மாதிரி நானும் நண்பரும் பேசிய படியே கடையில் சனத்தொகை குறையும் காத்திருப்போம் என முடிவெடுத்து கொண்டோம்.
Honey Milk கோப்பையோடு சிறிய கரண்டியும் தந்திருந்தார்கள்..... மெதுவாக கலக்கி கொண்டிருந்தோம்...அப்போது எனக்கோ பொறுமையிழந்து விட்டது... சரி Taste எப்பிடியிருக்கெண்டாவது பாத்திருவம் எண்டு கரண்டியால் சிறிது எடுத்து நாக்கில் விட்டுப் பார்த்தேன்... எங்கயோ குடிச்ச Taste ஆ இருக்கே என்று சொல்ல நண்பரும் சிறிது குடித்துவிட்டு " அடே நம்ம ஊர் கோயில்களில தாற தீர்த்தம் மாதிரி இல்ல" என்று சொல்லி விட்டு வெடிச்சிரிப் பொன்று சிரித்தான்.....சுற்றியிருந்த "சீனா" குட்டிகளெல்லாம் திரும்பிப் பார்த்தது... அதில் ஒன்று "So Funy Guys".... என்று வேறு சொல்லியது..... நம்ம ஊரில ஜயர்மார் ஓசில தாற தீர்த்தத்த மலேசியாவில எப்பிடி குடிக்கிறதெண்டு தெரியாம கடுப்பில இருக்க அந்த கரப்பொத்தான் காரி இப்பிடி சொன்னாள்....இது தான் சந்தர்ப்பம்.. நாங்கள் என்ன செய்தாலும் Fun என்று தான் நினைப்பார்கள் என்றபடி... அந்தப் பெரிய சட்டியை இரண்டு கையாலும் தூக்கி கண்ணை மூடிக் கொண்டு குடித்து முடித்தோம்....
மா.குருபரன்
Share on Facebook
ha ha ha ha