வற்றிய எண்ணையில்
எரியும் திரியின்
வெளிச்சத்தில்
இருள்
சாதுவாய் கலைகிறது...
சப்தம் நிரம்பிய
இடங்களிலெல்லாம்
மெனத்தின் ஊடுருவல்....
இழைத்த மனத்தோடு
இருளாக்கப்பட்ட இடத்தில்
மனிதங்கள்
அடைபட்டுகிடக்கிறது.....
இரவு நீண்டு செல்வதற்காய்
இருளாக்கப்பட்ட அறையில்
நினைவுகள்
முட்டி மோதிமௌனித்து கொள்கிறது.....
விழி அழுகிறது
மனம் அரவணைக்கிறது...
புதிய பரிமாணத்தில்
மனிதங்கள்
முடமாக்கப்பட்டு வீசப்பட்ட
இடம் அது...
நீறாக்கப்பட்ட நிஜங்கள்
வலிகளை கடந்து
நகங்களால்
சுவர்களை பிறாண்டுகிறது...
வடியும் ரத்தத்தில்
வலிகளெல்லாம்
வரிகளாக்கப்படுகிறது....
முடமாகடக்கப்பட்ட
மனங்களை ரசிக்க
துப்பாக்கி ஏந்திய பிசாசுகள்
இலங்கைச் சிறையில்....
02-02-08
மா.குருபரன்
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க