பார்த்த முதல் நாளே
மண்டியிட வைத்த உன் கண்கள்..
மொழியில்லாமலே பேசிடும்
உன் புன்னகை….
தோழியின் தோளில்
ஓளிந்து நின்று
உன் பார்வை சொல்லும் கதைகள்…
தூவான தூறலிற்கு
ஓதுங்கி நிற்கும் உன் அழகு…
மெல்லிய காற்றிற்கே
உன் கண்ணுக்குள்
ஒழிய வரும் கன்னத்து முடி…
அதை கோதி
கன்னத்தில் சேர்த்துவிடும் -உன்
விரல்களின் நாட்டியம்….
நீ கடந்து செல்லும் போதெல்லாம்
ஏதோ ஒரு படபடப்பு…
மழை ஓய்ந்த அந்த நிமிட குளிர்ச்சி…
எதுமே புரியாத ஒர் ஈர்ப்பு….
பேசாமல் தானே என்னை
கடந்து செல்வாய்….
கடந்த பின் திரும்பி
ஏன் பார்வைகளை வீசினாய்…
எல்லாமே முடிந்தது…
காலமும் விடை கொடுத்தது…
எப்போதும் போலவே
பேசாமல் நீ கடந்து செல்கிறாய்…
அப்போது தெரியவில்லை
இப்போது என்னிடம் காதல்
என்னிடம் மட்டுமே காதல்….
என்னிடம் மட்டுமே வலி…
மா.குருபரன்
22-10-09
//பேசாமல் நீ கடந்து செல்கிறாய்…
அப்போது தெரியவில்லை
இப்போது என்னிடம் காதல்
என்னிடம் மட்டுமே காதல்….
என்னிடம் மட்டுமே வலி…//
அட விடுங்கப்பா இந்த ஒரு தலை காதல..இந்த பிகர் இல்லன்னா இன்னொன்னு..காசு மட்டும் பத்திரம்...
ஹா ஹா......
//அட விடுங்கப்பா இந்த ஒரு தலை காதல..//
இப்படியான ஒரு தலை காதலில தாங்க நம்ம மாதிரி பசங்க கொஞ்சமென்றாலும் கனவு காண கூடிய மாதிரி இருக்கிறது....
ஒரு தலை காதலை வாழ வைப்போர் கட்சி நாங்க.. :))))))))
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி நண்பர் புலவன் புலிகேசி..
/அட விடுங்கப்பா இந்த ஒரு தலை காதல..இந்த பிகர் இல்லன்னா இன்னொன்னு..காசு மட்டும் பத்திரம்.../
நம்ம புலி சொல்லுரத கேளுங்கோன்னா.
ஆனாலும்,,,, வரிகளில் வலி சூப்பர்
//நம்ம புலி சொல்லுரத கேளுங்கோன்னா//
கேக்கிறனங்கோ..... அனுபவசாலிகள் சொல்லும்போது ஏதாவது காரணமிருக்கும்... :) :) :) :) :)
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி மலிக்கா அக்கா....