இரண்டாம் தடவை உயர்தர பரீட்சை எழுதிவிட்டு காவாலிகளாய் சுற்றியதில் நானும் ஒருவன்...காலை 8 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினால் வீடு செல்ல இரவு 8 மணிக்கு மேலாகும்..கிளிநொச்சியின் வீதிகளை சைக்கிளால் அளப்பதில் அப்படியொரு பிரியம்..(எந்த கெடுபிடியும் இல்லைத்தானே..) இல்லையென்றால் பந்தும் மைதானமும் தான்.எதிர்காலம் பற்றி எந்தவொரு எதிர்பர்ப்பும் இல்லாத ஒரு அற்புத வாலிபம் அது.நாங்கள் கலக்காத குளங்களே இல்லை அங்கு....,ஏ9ல் எமக்கென்றே திறந்த குயிலன் புத்தகசாலை..எமது திட்டங்கள் தீட்டப்படும் மத்திய நிலையம் அது.இப்படி கார்கால பூவாய் கழிப்போடு மட்டுமே இருந்த எனக்கு விழுந்தது இடி..மார்ச் 13ம் நாள் 2005 ஆம் ஆண்டு...(எனக்கு பல்கலைகழகம் கிடைத்துள்ளது என கடிதம் வந்த நாள்...)
ம்.. நிட்சயமாக சந்தோசப்பட்டேன்..பல்கலைகழ
வெளிப்படையாய் சொன்னால் அப்போதிருந்த என் கற்பனை மொறட்டுவை பல்கலைகழகம் உங்களை சிரிப்பூட்டும், வீதியெங்கும் பூத்துக் குலுங்கும் மரங்கள்.. பளிச்சிடும் வீதிகள்...அழகான பிகர்கள்.. பெரிய நீர்த்தடாகம்...பச்சை பசேலென விரிந்து கிடக்கும் பெரிய மைதானம்... அழகான பூங்கா...இன்னும் எத்தனையோ கற்பனைகள்....
மொறட்டுவைக்கான முதல் பயணமே தனிமையில் தான் ஆரம்பித்தது... பேருந்து நிலையத்தில் வைத்து ஒரு பெடியன் "மச்சான் வாற மாதம் AGA meet இருக்கு வருவதானே!!" என்றான்...ஏதோ ஒரு கற்பனை தேசத்தில் இருந்த என்னை தட்டியெழுப்பியது அந்த உரிமைக்குரல்... விடைபெற்று வவுனியாவிற்கு வந்து அங்கிருந்து மச்சானுடன் மொறட்டுவை வந்தடைந்தேன்...
ஆகா... இதா நம்மட மொறட்டுவ!!!! நினைத்தும் மனம் நம்பவில்லை.. "உள்ளுக்க வடிவாத்தான் இருக்கும்...". இருந்ததை விட எதிர்பார்ப்பு அதிகரித்தது...
நான் காவலாளியிடம் புது முக மாணவன் என சொல்லி என் அனுமதி கடிதத்தை காட்டும்போது.. ஒருவர் நீங்க புதுசா.. என்று கேட்டார்.. "ஓம்.. நீங்க.." என்ற எனக்கு "நான் உங்கட சீனியர்.. இப்பவா வாறீங்க.. எல்லாம் பதிஞ்சாச்சா.. வாங்க போய் பதிவம்"... அன்பான வரேவேற்புத்தான் ஆனா சீனியர் என்றவுடன் ஏதோ ஒரு படபடப்பு, பத்திரிகைகளில் சீனியர்களின் அட்டகாசங்களை வாசித்ததன் பாதிப்பு..... ஆனால் அப்போது கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது...
காவலாளி வாசலைத் தாண்டி என் கால்கள் கடக்கும் போது.. என் எதிர்பார்புகள் யாவும் குற்றுயிராய் துடித்து செத்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது...
என் பதிவு சம்மந்தமான எல்லா வேலைகளும் சீனியர்களாலேயே செய்து முடிக்கப்பட்டது....
எதிர்பார்புகளால் தூர்ந்து போயிருந்த என்னை தூக்கி நிறுத்தியது அவர்களின் வார்த்தைகள் தான்...பல்கலைகழகம் பற்றியதும் நடைமுறை பற்றியும் அவர்கள் கொடுத்த உறுதியான வார்த்தைகள் தான் அப்போது உளம் உறுதியாக காரணம் என்று கூட சொல்லலாம்.
வெடிகளின் ஆரம்பம்.....
முதல் நாள் இரவு.... எனக்கு தங்குவதற்கு இடமில்லை..ஒரு சீனியரண்ணா.. "எங்கட ரூமில நிக்கலாம் bags அங்க வையுங்க"... அன்பான அரவணைப்பு...என்னை வெகுவாகவே பாதித்திருந்தது... இரவு ருமில் தங்கினேன் என்னுடன் இன்னுமொரு புதுமுக மாணவன்.... ம்....கூடுதலான நேரங்களில் மெளம் தான் நீண்டு சென்றது.. அவனது விழிகளில் பயம் கலந்த ஏக்கம்... என்னையும் கிலி கொள்ள வைத்தது....அன்றிரவு அவனது ஏக்கம் உண்மையானது.. இரவு 8 மணியிருக்கும்... ஒருவர் வந்து.. என்னிடம்"டேய் நீயா புதுசா வந்தனி..." ஓமண்ண..என்றேன். ஆ.. சாப்பிட்டிற்றியா... சாப்பிட்டிற்று நில்லு நாங்க கொஞ்ச நேரத்தில வருவம் என்றார்...அப்போது என்னையறியாமலே என் வாய் மாபெரும் பொய்யொன்றை துப்பியது..
"அண்ண... சொந்தகாரர் ஒராள ஆஸ்பத்திரியில வைச்சிருக்கு நான் இரவு அங்க போகணுமண்ண..."என்றேன்...தொடர்ந்து இன்னொரு பொய் "அம்மா அவைக்கு இப்ப call அடிப்பா.. நான் கெதியாப் போகோணும்.. அதுதான் உங்களிட்ட சொல்லிற்று போகலாமெண்டு...." என்று இழுத்தேன்...பயத்தில் எனக்கு வந்த நடிப்பு அவர்களை நம்ப வைத்தது...சரியென்றார்கள்.
Bagஜ எடுத்துக் கொண்டு உடனேயே அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்... என்னுடன் கூட இருந்தவனை பார்க்க பாவமாய்தான் இருந்தது... நானோ கொழும்புக்கு புதுசு ஒருத்தருமில்லை பொய்யை சொல்லிவிட்டு வெளியேறிவிட்டேன் எங்கே போவதென்ற ஆயுத்தமுமில்லாமல்... சரி பஸ் எடுத்துகொண்டு புளியங்குளத்துக்கு போய் வீட்ட போகலாம் என்ற தைரியம் என்னை கொஞ்சம் தென்பாக்கியது... இருந்தும் சசிபரண்ணைக்கு call அடிச்சு இஞ்ச இருக்கேலாது பயமாயிருக்கு உங்கட ரூமுக்கு வரப்போறன் என்று அழுது வடியா குறையாக நின்றேன்..அப்ப சசிபரனண்ண சரி வெள்ளவத்தைக்கு வா என்றார்... என்கு ஒரு இடமும் தெரியாது அந்த இரவு நான் எங்கு வெள்ளவத்தையை தேடுவது...."எப்படியண்ண அங்க வாறது என்று கேட்டேன்..."100ம் நம்பர் பஸ்சில ஏறி IFS என்று பெரிசா தெரியும் கட்டிடத்துக்கு கிட்ட இறங்கென்றார்... சரி.. வெளிக்கிட்டாச்சு போவம் என்று தைரியத்தை உருவாக்கிக் கொண்டு பஸ்சின் முன்சீற்றில் இருந்து கொண்டு பெயர் பலகைகளையும் பெரிய கட்டிடங்களையும் பார்த்து கொண்டு சென்றேன்.. அப்போது அந்த IFS கண்ணில் பட்டது... அதற்கு அருகாமையில் பஸ்ச நிறுத்துங்கோ என்று சொல்ல சிங்களமும் தெரியாது.. ஒருவேள நிறுத்தாட்டி நம்மட பாடு சரி என்ற பயம் உடம்பெல்லாம் பரவியது... அதனால் நான் பஸ் நிற்கும் ஒரு இடத்தில் முதலே இறங்கி விட்டேன்(வில்லியம்ஸ் அடி) அதிலிருந்து IFS கட்டிடத்திற்கு நடந்துதான் சென்றேன்...
குளிர் இரவில் வீதியால் நடந்து செல்வது எவ்வளவு இன்பம் தெரியுமா??? கொடுமையில் இருந்தும் அந்த இனிமையை மனம் ரசித்தது. கொழும்புக்கு வந்து முதல் நாளே தனியாக இரவில் நடப்பதால் எதையோ சாதித்துவிட்டாய் பிரம்மையை உணர்ந்தேன்...சசிபரண்ணையும்
சுவையான அனுபவங்களின் ஆரம்பம்.....
மீண்டும் அடுத்தநாள் கம்பஸ்... காலை 6.30ற்கு அங்கு நிற்க வேண்டும்.. நேரத்துக்கு வெளிக்கிட்டு ஓட வேண்டும்.. பிந்தினா சீனியர்ஸ் விசுபரூபம் எடுப்பாங்கள் என்று எங்கட வகுப்பு பெடியன் ஒருத்தன் சொன்னான்... அதனால 10 நிமிடம் முதலே போய்விடுவோம்...மூன்று நேரச்சாப்பாடும் "wala canteen" ல தான் சாப்பிடோணும்..என்ன சாப்பாடு!!!!! தலைநகரில கிடைக்க கூடிய மலிவான உயர்தர உணவுகள் அங்கதான் கிடைக்கும்... சில நேரம் அந்த அருமையான சாப்பாட்டை சாப்பிடும் போது அழுகையழுகையா வரும்....
இப்படித்தான்..5ம் நாள் இருக்கும்..முட்டை பணீஸ் வேண்டி ஸ்ரைலாக சாப்பிடுவம் என்று வாயில வைச்சன் அப்போது ஒராள் "டேய் அதென்ன மிளகாய வெளில வச்சிருக்கிற????" என்றார்...இல்லண்ணா.... என்று இழுத்து முடிக்க முதல்...அது சாப்பிடதானே வச்சிருக்கு எறிய இல்லத்தானே.... அப்ப சாப்பிடு என்றார்...காலங்காத்தால பச்ச மிளகா சாப்பிட்டா எப்பிடி இருக்கும்...சூப்பர்.... இஞ்சி திண்ட குரங்கவிட அப்பிடியொரு அந்தரம்...ஆனால் இப்பொழுது நினைக்கும் போது சுவைக்கிறது....
கம்பசுக்கு நாங்க ஒவ்வொரு நாளும் தலைக்கு எண்ணை வைச்சு சரித்து தலையிழுத்து போக வேணும்.... அப்பிடி இல்லாட்டி என்ன நடக்கும் தெரியுமா....கூட எண்ணை வைச்சு கொண்டு வந்தவன் எண்ணை வைக்காதவனுக்கு தலையாலேயே எண்ணையை பரிமாற வேண்டும்.....பாலர் வகுப்பில நாலுகாலுல இருந்து மாடு மாதிரி முட்டி விளையாடுற ஞாபகம் எல்லாம் அப்ப வரும்.
பொழுதுகள் புலரும்....
மா.குருபரன்
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க