Monday, October 19, 2009

முகம் தெரியாத நட்பு....

0 கருத்துக்கள்


இன்னும்
நீண்ட காலத்திற்காய்
மீண்டும் மின்னஞ்சல்...
அன்பின் ஆழம்
வெறுப்பாய்
பாசாங்கு செய்கிறது...
முகவரியிடாத மின்னஞ்கலுக்கு
முகவரியிட்டு வந்த பதில்
நட்பு சங்கிலியால்
இரண்டு இதயங்களை
பிணைத்து போட்டது...
அலையில்லாத ஆற்றங்கரையில்
வயலின் ஓசையாய்
இதமாய் நகரும்
இந்த நட்பில்
இடையிடையே
சின்னச் சின்ன சண்டைகள்
ஏற்கனவே அறிந்தவர்கள் போல்!!!!!!!
பிரிய நினைப்பதும்
பிரிய முடியாமல் தவிப்பதும்
முகம் தெரியாமல்
எப்படி வந்தது?????
வெறும்
பேச்சுக்கும் எழுத்திற்குமிடையில்
எப்படி உயிர் பெற்றது - இந்த
முகம் தெரியாத நட்பு???

முகம் தெரியாத
இந்த நட்பு
தொலைந்து போகும்
நாள் வந்தால்
ஒரு தடவை நினைத்துப்பார்.....
பரிமாறப்பட்ட வாழ்த்துகளையும்
அதிக நேரம் கதைப்பதற்காய்
அடிக்கடி போட்ட சண்டைகளையும்...

-மா.குருபரன்-
02-02-09

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க