இந்த பதிவு என்னுடைய தனிப்பட்ட ஜயப்பாடுகளே தவிர வேறொன்றுமில்லை. நான் ஒரு சராசரி ஈழத்தமிழன். ஈழத்தை விட்டு வெளியே இந்தியா, சிங்கப்பூர், மற்றும் மலேசியாவிற்கு பயணம் செய்துள்ளேன். இந்த பயணங்களில் நான் பல தமிழர்களை சந்தித்துள்ளேன். அதன் வெளிப்பாடே எனக்கு வந்துள்ள இந்த ஜயப்பாடு.
பல்கலைகழக நிகழ்ச்சி ஒன்றிற்காக பங்களூர் சென்றிருந்தேன் அப்போது அங்கு பல நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஆபிரிக்க நாட்டு மாணவர்கள் மற்றும் இந்தியாவின் வெவ்வேறு இடத்து மாணவர்களும் இருந்தார்கள். அங்கே எங்களை நாங்கள் அறிமுகப்படுத்தி கொண்டோம்.
என்னை நான் அறிமுகப்படுத்தும் போது வழமைபோல் "ஜ ஆம் குருபரன் ஃபுறம் சிறிலங்கா அன்ட் டமில்" என்றேன்.
இங்கே நான் தமிழ் என்று கூறியதை வைத்து பலபேர் இது இனவாதம் என்று அரசியல் மேயலாம். அது அவரவர் கண்ணோட்டத்திற்குட்பட்டது. தாய் மொழிதான் இனத்தை தீர்மானிக்கிறது அதனால் நான் அடிப்படையில் மொழிவாதி தான். சரி இதை விடுங்க.
இப்படியே அறிமுகப்படுத்தி கொண்டு வரும்போது ஒரு பெண் தன் பெயர் தேவி என்றும் இந்தியன் என்றும் சொன்னார் அடுத்த பெண் தன் பெரை கூறி(பெயர் உண்மையிலையே ஞாபகமில்லிங்க) பஞ்சாபி என்றார்.
என்ன சொன்னார்? ஏன் இப்படி சொன்னார்? என்று மீட்டுப்பார்க்கும் மனநிலை அப்போது இருக்கவில்லை. (அழகான பெண்கள் அருகில் நிற்கும் போது இதுகளை பற்றி பேசுவதற்கோ சிந்திப்பதற்கோ ஒரு வாலிப மனசு எப்புடி இடம் கொடுக்கும்).
பின்.... சிங்கப்பூர். இங்கு "லிட்டில் இந்தியா" என்று அழகான தமிழ் ஏரியாவே உள்ளது.
நிறமானவராக இருந்தால் நாங்கள் உடனடியாக தமிழில் பேச்சு கொடுக்க முடியாது தானே.. இப்படியான சந்தர்ப்பங்களில் "யு ஆர்..." என்று இழுத்தாலே போதும் "ஜ ஆம் இட்டியன்" என்பார்கள்.( கேட்க நினைத்தது நீங்க மலாய் யா..இல்ல சைனீஸ் ஆ என்று). அதன் பின் "ஓ.. இந்தியா விச் பார்ட்" என்றால் மட்டுமே தமிழ் நாடு... அதன் பின்தான் தமிழா என்று கேட்டால்தான் " யா.. ஜ ஆம் டமில்" என்பார்கள்
பின்பு.. மலேசியா... இங்கு தான் மோசம். எல்லாருமே தாங்கள் "இந்தியன்ஸ்" என்றே கூறிக் கொள்வார்கள். மலேசியாவில் ஒரு கடைக்கு சென்றிருந்தேன்(ஸ்செவின் லெவின்)
அங்கே ஒரு பெண் காசாளர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தான். பொட்டுவைத்து அடக்கமான எம் தமிழ் பெண்களை போல் காட்சியளித்தாள். சரி சும்மா பேச்சு கொடுத்து பார்ப்பம் என்று " ஆர் யு இன்டியன்" என்றேன்.சட்டென்று அவள் "நோ... ஜ ஆம் பஞ்சாபி" என்றாள். நானும்.. ஆ..ஓகே.. நீங்க பொட்டு வைச்சிருக்கிறீங்க அது தான் தமிழ் என்று நினைத்துவிட்டேன் என்றேன். அவளும்... இல்லை இல்லை பஞ்சாபில கூட பொட்டு வைப்பார்கள் என்றாள்.
இந்த சம்பவம் தான் என்னுடைய இந்த ஜயப்பாட்டிற்கான முழுமையான காரணம்.
இது சரியா பிழையா என்பதற்கப்பால்.. எப்போதுமே பெயர், வீடு, ஊர், அதன்பின் தானே நாடு?? இப்படித்தானே முகவரி எழுதுகிற வழமை கூட. இப்படி இருக்க ஏன் நாட்டை மட்டும் குறிப்பிட வேண்டும். இது தான் தேசியப்பற்றா? அப்படியென்றால் மற்றய இனத்தவருக்கு தேசிய பற்று இல்லை எனலாமா?
ஒன்று மட்டுமே வெளிப்படை உண்மை. எல்லா உரிமைகளும் பிடுங்கப்பட்டு மொழிகூட மறுக்கப்பட்டிருந்தால் மட்டுமே நாட்டை மட்டும் முகவரியாக சொல்ல முடியும். ஏனென்றால் மற்றவனுக்கு தன்னை எல்லா விதத்திலும் அடையாளப்படுத்தி அறிமுகப்படுத்தி கொள்ளும் போது தமிழன் மட்டும் தயங்குவதற்கு இதைவிட வேறு எது காரணமாய் அமைந்துவிடும்?
நான் தமிழ், சிறிலங்கா... இப்படி கூறுவதால் என்ன பிழவுபட்டுகிடக்கிறது. இப்படித்தான் சிங்களவர்களும் கூறுகிறார்கள். எனக்கருகில் இருப்பவன் தன்னை "கண்டி, இலங்கை" என அறிமுகப்படுத்தினால் நான் "கிளிநொச்சி" என்று இடத்தையும் கூறித்தான் அறிமுகப்படுத்துவேன். அது தான் முறையும் கூட. நான் தமிழனெண்று கூறுவதாலோ அல்லது நான் சார்ந்த ஊரை கூறுவதாலோதான் என் முகவரி முழுமை பெறுகிறது.
ஆக ஒரு நாட்டுகாரன் தன்னை தன் இனம் சார்ந்ததாக அல்லது தன் நிலம் சார்ந்ததாக கூறி தன் முகவரியை ஆரம்பிக்கும் போது வேறொரு அதே நாட்டுக்காரன் வெறும் நாட்டை மட்டுமே முகவரியாய் இட்டு முற்றுப்புள்ளி வைப்பானாயின் அந்த நாட்டில் அவனுக்கென்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை என்பது போல் இல்லையா????
நான் 'இந்திய தமிழன்' ,நான் இந்தியன்.
இதில் எது சரி? எப்படி சொல்வது சரியான முகவரி?
எனது இந்த பதிவில் ஏதும் ஆட்சேபனை இருந்தாலும் சரி... வழிமொழிந்தாலும் சரி... உங்களுடைய விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
கருத்தூட்டிவிட்டு செல்லுங்கள்.
பி.கு: நான் ஈழத்தமிழன் என்று என்னை அறிமுகப்படுத்தி, பின் முகவரி சொல்லும் போது இலங்கை என்று சொல்லியிருக்கிறேன். ஈழம் என்பது இலங்கையின் தமிழ்ப் பெயர்.
மற்றும் இது வெறும் என் சிந்தனைகளே...
மா.குருபரன்
29-10-09
மறக்காம தமிழிஸ்லயும் தமிழ் மணத்திலையும் ஓட்டு போடுங்க :)))))))))
சரியான சிந்தனை குருபரன்.
என்னதான் சொன்னாலும் எங்க இருந்தாலும் நாங்கள் இலங்கைத் தமிழர்கள்தானே !
(நிறையச் சொல்லலாம் வேண்டாம் )
நன்றாய் ஆய்ந்திருக்கிறீர்கள். நான் சொல்வது, இந்தியன் அடுத்து கேட்டால் தமிழ்... பின், எனது மாவட்டம்.... என நீளும்.
பிரபாகர்.
//நிறையச் சொல்லலாம் வேண்டாம்//
சொல்லுங்க நாங்க கட்டாயம் கேட்போம் :))
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றிகள் ஹேமா
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றிகள் பிரபாகர்
யாராவது என்னைக் கேட்டால் நான் சொல்வது இந்தியா!
நாட்டின் முகவரியில் இனம் தேவை இல்லை.
எனக்கு நிச்சயம் ஹிந்தி தெரியாது. அது எனக்கு அவசியம் இல்லை என்ற உறுதி உண்டு.
//நாட்டின் முகவரியில் இனம் தேவை இல்லை.//
ம் நிட்சயமாக...நாட்டின் முகவரிக்கு இனம் தேவையில்லை தான். ஆனால் தம்மை இனங்காட்ட இந்திய 'தமிழர்கள்' மட்டும் ஏன் நாட்டை குறிக்கிறார்கள் என்ற ஜயப்பாடுதான் எனக்கிருக்கிறது. இந்தியா எனக்குறிப்பிடுவது தப்பென்று கூறவில்லை 'இந்திய தமிழர்' என்று கூறலாம் தானே என்ற ஆதங்கம். அது தான் 'இந்தியன்' என்பதா 'இந்திய தமிழன்' என்பதா பொருத்தம்
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி நண்பரே...
ராஜேந்திரன்
தமிழ் இந்தியன் என்றே சொல்ல வேண்டும். காரணம் தமிழ் இனத்தின் வயது 5000 ஆண்டுகளுக்கும் மேல். அனால் இந்தியாவின் வயது 62 மட்டுமே. மேலும் இந்திய என்பது ஒரு நாடு அல்ல, துணைகண்டம். பல இனங்களின் கூட்டமைப்பு.
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி ராஜேந்திரன்
சரியாக சொல்லி இ௫ந்தீங்க கு௫, நாங்கள் எங்கெங்கெல்லாம் இ௫ந்தாலும் ஈழத்தமிழர்கள்தானே.
நேற்று இன்று நாளை என்றென்றும் நாங்கள் ஈழத்தமிழர்கள்தான். (இலங்கை தமிழன் என்று சொல்ல வெட்கமாய் இ௫க்கிறது)
இலங்கை தமிழன் என்பதை விட ஈழத்தமிழன் என்று சொல்வதில் பெ௫மை எனக்கு.
இலங்கை தமிழன் என்பதை விட ஈழத்தமிழன் என்று சொல்வதில் பெ௫மை எனக்கு.