வலிகளுக்குள்ளும்
ஏன்
புன்னகைக்க கற்று கொண்டாய்!!
எம் உணர்வுகளை உலகம்
ஏற்றுக் கொள்ள
எப்போதும்
தயாராக இருந்ததே இல்லை….
உன் கண்களில் தெரியும் வலியை
கண்டுபிடிக்க
மனிதாபிமானத்தில்
இன்னமும் இயந்தியரம்
உருவாக்கப்படவில்லை……
வெறுமனே
மேலிழுத்து விடப்பட்ட - இந்த
வாயிலின் நாடா
எப்போதும் மூடப்படலாம்…….
இது தான் - என்
இறுதிப் புன்னகையாக கூட இருக்கலாம் -என
உன் இறுக்கி கொள்ளும்
கரங்கள் கூறுவது
எனக்கு மட்டும் தான் தெரியும்….
மேற்கத்தைய விஞ்ஞானம்
இதை புரிந்து கொள்ள
பல காலம் எடுக்கலாம்….
கண்ணீரும் வற்றிப்போய்
கனவுகளும் செத்துப்போய்
எஞ்சிக்கிடப்பது இது மட்டுமே – என
சொல்லும்
உன் புன்னகையின் அர்த்தம்
எவருக்கு புரியும்!!!!!!
மா.குருபரன்
30-10-09
உண்மை கசக்கிறது......
ம்.. நிட்சயமாக....
இந்த கலியுக மானிடத்தில் பல உண்மைகள் சில சுயநலன்களால் மூடப்பட்டுகிடக்கிறது...
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி இரா.குணசீலன்
வலி உள்ள பதிவு..........
//மேலிழுத்து விடப்பட்ட - இந்த
வாயிலின் நாடா
எப்போதும் மூடப்படலாம்……. //
நம்பிக்கை இருக்கட்டும்...நாளையும் நடக்கலாம்....
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி ஊடகன்
//நம்பிக்கை இருக்கட்டும்...நாளையும் நடக்கலாம்....//
ம்... எஞ்சிக்கிடப்பது நம்பிக்கையும் புன்னகையும் மட்டும் தான்....
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி பாலாசி
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Great read tthanks