
மெளனம்
இப்போது போலவே
எப்போதும் பேசியதில்லை....
உடைந்து போன
கனவுகள்
கண்ணீராய் கிடக்கிறது
தலையணையில்...
நனைந்து கிடந்த
ஓரத்தில்
செயலற்றுப்போன
கரங்களின் விரல்
எதையோ கிறுக்க
நினைக்கிறது....
அதையும் அழித்துவிடுகிறது
தொடர்ந்துவரும்
மற்றொரு கண்ணீர்த்துளி....
நட்சத்திரங்களே இல்லாத
ராத்திரி வெளியில்
தேய்ந்து போகாத
மீதித்துண்டுடன்
கிழிந்து தொங்குகிறது நிலவு.....
விழியை மூடினால்
கண்ணீர்
திறந்தால் வலி....
ம்.......
மெளனம்
இப்போது போலவே
எப்போதும் பேசியதில்லை....
மா.குருபரன்
22-04-10
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க