Saturday, April 24, 2010

சயனமாகிப்போன எல்லாம்......

4 கருத்துக்கள்

உன் கை நழுவிய
அப்போதிலிருந்துAlign Left
தூசிமேட்டில் கிடக்கிறது
சுருதி ஏற்றப்படாத வீணையாய் - என்
காதல்.........

இலை இடுக்குகளில்
குமிழ்ந்து கிடக்கும்
மழைத்துளிகளை - நான்
இப்போது ரசிப்பதில்லை..

தாயின் கரங்களிலிருந்து
தப்பியோட
கால் உதைத்து
அடம்பிடிக்கும் குழந்தையின்
ஓரக்கண்ணில் தெரியும்
வெட்கத்தை - நான்
இப்போது ரசிப்பதில்லை.....

சேறுகலக்கும் கோழிகளையும்
பூமியில் கிறுக்கும் பூச்சிகளையும்
நான் இப்போது
கண்டு கொள்வதேயில்லை...

மழைக்காற்றில்
இப்போது
எந்தக் குளிர்ச்சியும்
இருப்பதில்லை..

மழை ஓய்ந்த நாளில்
சாலையோர கடையில்
தேனீரருந்த
இப்போதெல்லாம் பிடிப்பதேயில்லை....

உதிர்ந்து கிடக்கும்
கொண்டல் பூக்களையோ - அதில்
துள்ளி விளையாடும்
மைனாக்களையோ ரசிக்க
மனம்
இப்போதெல்லாம்
விரும்புவதேயில்லை.....

எல்லா ரசனைகளையும்
ஒற்றை நாணில் ஏற்றி
எப்போது வீசினாயோ
அப்போதே செத்துவிட்டது
அத்தனை நரம்புகளும்.


மா.குருபரன்
24.04.2010

4 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க