இடிந்து போன
காதல் சாம்ராஜ்ஜிய இடுக்குகளில்
துடி துடித்து
இறந்து கொண்டிருக்கிறது
அது பற்றிய கனவுகள்....
முடிந்து போகா
முடிவிலி நினைவுகளின் ஓரத்தில்
துருப்பிடித்து தொங்கியபடி
காதலின் எச்சங்கள்...
வலிந்து வலிந்து
அகற்ற நினைத்தாலும்
அதை பிடுங்கும் போது
வலிக்கிறது நெஞ்சு....
அழிந்து போகாதென்றெண்ணி -காதலை
பசுமரத்தாணியாய்
அறைந்தது என் தவறா???????
கடிந்து விட்டுப்போ
காரணத்தை செப்பி விட்டுப்போ
சப்பிய வெற்றிலையாய்
துப்பி விட்டு போகிறாயே
எப்படி முடிகிறது உன்னால்!!!!!!
மா.குருபரன்
30-04-2010
சப்பிய வெத்திலை...சூப்பர். வாழ்த்துக்கள்
//சப்பிய வெற்றிலையாய்
துப்பி விட்டு போகிறாயே
எப்படி முடிகிறது உன்னால்!!!!!!//
super.
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி மதுரை சரவணன்.