நினைவுகளின்
இடுக்குகளில்
தேங்கிக் கிடக்கிறது
உன் புன்னகை.
தொலைந்துவிட்ட பின்னும்
உன் பற்றிய
பிரியத்தின் அலாதி
பட்டுப்பூச்சிகளின் பின்னால்
தவழ்ந்து திரியும்
குழந்தையை போல்
மனதை கிறுக்கிறது...
மனசுக்குள்..
பாதிநிலா வெளிச்சம்
பனி இரவு
ஒன்றைக்கரத்தில் படர்ந்தபடி -என்
மார்புக்குள்
முகம் புதைத்து
தனியாய் பறக்கும்
வெளவாலை
ஏளனம் செய்கிறாய்
காதல் செய்யத்தெரியாத
பறவையென்று....
ஹம்....
இன்னமும்
உன் பற்றிய
பிரியத்தின்
அலாதியால்
விழிப்பிலும் தொலைந்துவிடுகிறேன்...
மா.குருபரன் (12-07-10)
நல்லா இருக்குங்க...
உங்களின் ப்ரியம் அருமை
மிக அருமை
படத்துடனே பாதி ப்ரியங்கள் ஒட்டிக்கொண்டுள்ளன.. அருமைங்க...
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றிங்க கே.ஆர்.பி.செந்தில்.
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றிகள் வசந்த்
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றிகள் உலவு.காம்
நன்றிகள் தோழர் பாலாசி